தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்தியா அணி சவலாக இருக்கும் - இலங்கை பயிற்சியாளர் கணிப்பு...

 
Published : Dec 26, 2017, 10:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்தியா அணி சவலாக இருக்கும் - இலங்கை பயிற்சியாளர் கணிப்பு...

சுருக்கம்

india give tough to South Africa will be - Sri Lanka coach

இந்திய பேட்டிங் லைன் ரன்களை குவிக்கும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்க அணிக்கு அது மிகுந்த சவாலாக இருக்கும் என்று இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் ஆட்டம் குறித்து இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் நிக் போத்தாஸ் கூறினார்.

இந்தியா வந்த இலங்கை அணி தலா மூன்று ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட், ஒருநாள், டி-20 கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியுடன் மோதியது. அந்தத் தொடர்கள் அனைத்தையும் இந்தியா கைப்பற்றியது.

இந்த நிலையில், கடைசி டி-20 ஆட்டத்துக்குப் பிறகு பேசிய இலங்கை பயிற்சியாளர் நிக் போத்தாஸ் கூறியது:

"தென் ஆப்பிரிக்கா போன்ற ஒரு அணிக்கு எதிராக விளையாடும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய அனைத்து பகுதிகளிலும் இந்தியா தயார் நிலையில் உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் புற்கள் நிறைந்த ஆடுகளமாக இருக்கும் பட்சத்தில், பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்டிங் லைனுக்கு சவால் அளிக்கும் இந்தியா.

 அதுவே, சமதள ஆடுகளமாகவோ, சூழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் அதற்குத் தயார் நிலையிலும் இந்தியா உள்ளது. இந்திய பேட்டிங் லைன் ரன்களை குவிக்கும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்க அணிக்கு அது மிகுந்த சவாலாக இருக்கும்.

இலங்கைக்கு எதிரான தொடரில் ஒருநாள் ஆட்டங்களில் இந்தியா பலம் வாய்ந்ததாக இருந்தது. கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய அணியில் மேற்கொண்ட மாற்றம் அவர்களின் ஆட்டத்தை பாதிக்கவில்லை.

ஆட்டத்தை முடித்து வைப்பதில் உலகிலேயே சிறந்த வீரர் தோனி தான். ஆனால், கடைசி டி20 ஆட்டத்தில் பாண்டியாவுக்கு அதுபோன்ற ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

மூத்த வீரர்களிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக் கொள்ள இளம் வீரர்களை கட்டமைக்கும் வகையில் இவ்வாறு அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இந்திய அணியிடம் இருந்து கற்பதற்கு அதிகம் உள்ளது.

இந்திய அணியில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு சவாலாக இருப்பார்கள். அதேபோல், அவர்கள் அணியில் இம்ரான் தாஹிரும் பதிலடி கொடுக்கலாம். ஒருநாள் தொடரில் இவர்களே தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள்" என்று நிக் போத்தாஸ் கூறினார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!