
மும்பையில் மூன்று நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா "ஏ' டீம் - ஆஸ்திரேலியா இன்று மோதுகிறது.
ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய "ஏ' அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாக இருக்கும்.
அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கும் ஒரே பயிற்சிப் போட்டி இதுதான்.
எனவே அந்த அணியினர் இந்தப் போட்டியை முடிந்த அளவுக்கு சிறப்பாக பயன்படுத்தி இங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்ள முயற்சி செய்வதும் உறுதி.
டாஸ் வென்ற இந்தியா ஏ அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 23-ஆம் தேதி புணேவில் தொடங்குகிறது.
அதை முன்னிட்டே இந்தப் பயிற்சி போட்டி நடைபெறுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.