ஐபிஎல் தொடங்கப் போகுது: இரசிகர்களே தயாராகுங்க…

 
Published : Feb 16, 2017, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
ஐபிஎல் தொடங்கப் போகுது: இரசிகர்களே தயாராகுங்க…

சுருக்கம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் 10-ஆவது ஆண்டு போட்டிகள் ஏப்ரல் 5-ஆம் தேதி ஐதராபாதில் தொடங்க இருக்கிறது.

2017-ஆம் ஆண்டுக்கான முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கடந்த சீசனில் 2-ஆவதாக வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

இறுதி ஆட்டமும், ஐதராபாதில் உள்ள இராஜீவ் காந்தி மைதானத்தில் மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

10-ஆவது ஐபிஎல் போட்டிகள் சுமார் 47 நாள்களாக பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது.

அட்டவணையிட்டபடி, ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாடும். இதில் 7 ஆட்டங்கள், அந்தந்த அணி சார்ந்த மாநிலத்தின் சொந்த மைதானத்தில் நடைபெறும்.

கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக இந்த சீசனில் இந்தூர் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதனிடையே, இதர ஆட்டங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி ரைசிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் புணேவில் நடைபெறுகிறது.

ஏப்ரல் 7-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, ராஜ்கோட் மைதானத்தில் குஜராத் லையன்ஸ் அணி சந்திக்கிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏப்ரல் 8-ஆம் தேதி பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

அதேநாளில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இந்தூரில் ரைசிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?