பெல்ஜியம் ஆடவரை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி…

First Published Sep 20, 2017, 10:17 AM IST
Highlights
indain Women team won Belgium ...


பெல்ஜியம் ஆடவர் இளையோர் அணிக்கு எதிரான வலைகோல் பந்தாட்டத்தில் இந்திய மகளிர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.

பெல்ஜியம் ஆடவர் இளையோர் அணிக்கு எதிரான ஹாக்கி ஆட்டத்தில் கோல் கணக்கை இந்திய அணியே முதலில் தொடங்கியது.

ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்தியாவின் குர்ஜித் கெளர் கோலாக மாற்றினார்.

இந்த நிலையில், 11-வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பையும் மிகச் சரியாகப் பயன்படுத்தி கோலடித்தார் குர்ஜித் கெளர்.

பெல்ஜியம் அணியின் தடுப்பாட்டத்தை தகர்க்கும் வகையில், ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ராணி ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில், பெல்ஜியத்தின் ஒரு கோல் வாய்ப்பை அருமையாகத் தடுத்தார் கோல்கீப்பர் ரஜானி.

இதனையடுத்து, முதல் பாதி நேர ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

பின்னர் 2-வது பாதி ஆட்டத்திலும் இந்திய அணி கேப்டன் ராணி மீண்டும் ஒரு கோல் அடிக்க, 4-0 என பெல்ஜியத்தை பின்னுக்குத் தள்ளியது இந்தியா.

இருப்பினும், கடைசி நேரத்தில் பெல்ஜியம் அணியின் டிபால்ட் நிவின் பெனால்டி கோல் ஒன்றை அடித்தார். இதனால் உத்வேகம் பெற்ற அந்த அணி, 42 மற்றும் 48-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து முன்னேறி வந்தது.

எனினும், ஆட்ட நேர முடிவில் இந்தியா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்னையடுத்து, ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய மகளிர் அணி, கடைசி ஆட்டத்தில் வெற்றியுடன் அந்த சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துள்ளது.
 

tags
click me!