நியூசிலாந்தை  அடித்து துவம்சம் செய்த மகளிர் கிரிக்கெட் அணி…அரையிறுதிக்கு அசத்தல் முன்னேற்றம்..

First Published Jul 16, 2017, 6:51 AM IST
Highlights
indain women cricket team entre in to semi final


நியூசிலாந்து அணிக்கு எதிரான பெண்கள் உலகக்கோப்பை லீக் போட்டியில், பவுலர்கள் அசத்த, 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதிக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க அணிகள் ஏற்கனவே முன்னேறிவிட்டன.

நேற்று டெர்பியில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் வென்றால் மட்டுமே அரையிறுதி என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் மிதாலி ராஜ், சதம் அடித்து கைகொடுக்க, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்தது



எட்டக்குடிய இலக்கை துரத்திய நியூசிலாந்து பெண்கள் அணி, ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டது. அந்த அணியின் சாட்டர்வெயிட் (26), மார்டின் (12) ஆகியோரைத்தவிர மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை.

இதையடுத்து நியூசிலாந்து அணி, 25.3 ஓவரில், 79 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 186 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்குள் அசத்தலாக நுழைந்தது.

 

 

 

click me!