கொரிய வீரரிடம் தோல்வி கண்டு போட்டியைவிட்டு வெளியேறினார் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய்…

Asianet News Tamil  
Published : Jul 15, 2017, 10:15 AM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
கொரிய வீரரிடம் தோல்வி கண்டு போட்டியைவிட்டு வெளியேறினார் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய்…

சுருக்கம்

Indias HS pranai defeated by the Korean player

கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய், கொரிய வீரர் ஜியோன் ஹியோக் ஜின்னிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டி கனடாவின் கல்கேரி நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் மற்றும் போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் ஜியோன் ஹியோக் ஜின் மோதினர்.

இதில், 21-17, 14-21, 13-21 என்ற செட் கணக்கில் ஜியோன் ஹியோக் ஜின்னிடம் தோல்வி கண்டார் எச்.எஸ்.பிரணாய். இதன்மூலம் போட்டியிலிருந்து வெளியேறினார் பிரணாய்.

மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் மற்றொரு இந்திய வீரரான கரண் ராஜன் 18-21, 14-21 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கோகி வாடானேப்பிடம் தோல்வி கண்டார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை இந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21-17, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சோய் சோல்கியூ-ஜீ வான் கிம் இணையைத் தோற்கடித்தது. இதன்மூலம் இந்திய இணை காலிறுதிக்கு முன்னேறியது.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா - சிக்கி ரெட்டி இணை தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21-11, 21-17 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் ராபின் டபேலிங்-செரில் சினென் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 1வது ODI: இந்திய அணி களமிறங்கும் புதிய மைதானம்.. இத்தனை கோடியில் உருவாக்கப்பட்டதா..?
ருத்ராஜ் மரண அடி.. ஜாம்பவான் சாதனையை ஓவர்டேக் செய்து மாஸ்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி!