
சீனாவின் உஹான் நகரில் இன்றுத் தொடங்கும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நெவால், அஜய் ஜெயராம், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் களமிறங்கி அதிரடி காட்டுத் தயாராகின்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து தனது முதல் சுற்றில் இந்தோனேசியாவின் டினார் தியாவுடன் மோதுகிறார்.
சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் ஜப்பானின் சயாக்கா சாட்டோவுடன் மோதுகிறார்.
சாய்னாவும், சாட்டோவும் இதுவரை ஏழு முறை நேருக்கு நேர் மோதியதில், சாய்னா 6 முறை வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஜய் ஜெயராம் தனது முதல் சுற்றில் சீனாவின் டியான் ஹுவெயுடன் மோதுகிறார்.
எச்.எஸ்.பிரணாய் தனது முதல் சுற்றில் ஹாங்காங்கின் லாங் ஆங்கஸுடன் மோதுகிறார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி - சிக்கி ரெட்டி இணை தங்களின் முதல் சுற்றில் சீனாவின் ஜெங் ஷிவெய் - சென் கிங்சென் இணையுடன் மோதுகிறது.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா – சிக்கி ரெட்டி இணை தங்களின் முதல் சுற்றில் தென் கொரியாவின் யோ ஜங் - கிம் சோ இயோங் இணையுடன் மோதுகிறது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை தங்களின் முதல் சுற்றில் சீனாவின் ஹைபெங் - ஜங் நேன் இணையுடன் மோதுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.