2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி.. கோலியை கேப்டனாக்கி கௌரவித்தது ஐசிசி!! கோலி தவிர 2 இந்திய வீரர்களுக்கு அணியில் இடம்

By karthikeyan VFirst Published Jan 22, 2019, 1:15 PM IST
Highlights

ஒவ்வொரு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி ஆகியவற்றை ஐசிசி அறிவிப்பது வழக்கம். 
 

ஒவ்வொரு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி ஆகியவற்றை ஐசிசி அறிவிப்பது வழக்கம். 

அந்த வகையில் கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர் மற்றும் சிறந்த கிரிக்கெட் வீரர் ஆகிய மூன்று விருதுகளையும் ஒருசேர வென்று சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. 

அதுமட்டுமல்லாமல் ஐசிசி அறிவித்த 2018ம் ஆண்டின் கனவு டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டின் கனவு டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்களாக நியூசிலாந்தின் டாம் லதாம் மற்றும் இலங்கை அணியின் ஓபனர் கருணரத்னே ஆகிய இருவரையும் ஐசிசி தேர்வு செய்துள்ளது. மூன்றாம் வரிசை வீரராக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனையும் நான்காம் வரிசை வீரராக இந்திய அணியின் கேப்டன் கோலியையும் தேர்வு செய்துள்ளது. 

கோலிதான் இந்த அணிக்கு கேப்டனும் கூட. ஐந்தாம் வரிசையில் நியூசிலாந்தின் ஹென்ரி நிகோல்ஸ் மற்றும் 6ம் வரிசை வீரர் மற்றும் விக்கெட் கீப்பராக இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ரிஷப் பண்ட், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்தார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தது குறிப்பிடத்தக்கது. 

ஆல்ரவுண்டராக வெஸ்ட் இண்டீஸின் ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக இந்திய அணியின் பும்ரா மற்றும் தென்னாப்பிரிக்காவின் காசிகோ ரபாடா ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஸ்பின் பவுலர்களாக ஆஸ்திரேலிய அணியின் நாதன் லயன் மற்றும் பாகிஸ்தானின் முகமது அப்பாஸ் ஆகிய இருவரையும் ஐசிசி தேர்வு செய்துள்ளது. 

ஐசிசி தேர்வு செய்த 2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி:

டாம் லதாம், கருணரத்னே, வில்லியம்சன், விராட் கோலி(கேப்டன்), ஹென்ரி நிகோல்ஸ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், ரபாடா, நாதன் லயன், பும்ரா, முகமது அப்பாஸ். 
 

click me!