ஹாட்ரிக் சாதனை படைப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை - குல்தீப் யாதவ் நெகிழ்ச்சி…

 
Published : Sep 23, 2017, 11:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
ஹாட்ரிக் சாதனை படைப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை - குல்தீப் யாதவ் நெகிழ்ச்சி…

சுருக்கம்

I never thought I would create a hat-trick - Kuldeep Yadav

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் சாதனை படைப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை என இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார் குல்தீப் யாதவ்.

ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த குல்தீப் யாதவ் கூறியது:

“ஹாட்ரிக் சாதனை படைப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. எனினும் இப்போது ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருப்பது சிறப்புமிக்கது ஆகும். எனது ஹாட்ரிக் சாதனையால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. இது எனக்கு பெருமை மிக்க தருணமாகும்.

ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்துவதற்காக பேட் கம்மின்ஸுக்கு பந்துவீசியபோது வழக்கத்துக்கு மாறாக பந்துவீசினேன். ஒருவேளை அந்த பந்து சுழன்றிருந்தால், நான் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்க முடியாது. 

இந்த ஆட்டத்தில் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால், ஆரம்பத்தில் பந்துவீசுவது கடினமாக இருந்தது. அதனால் ஓட்டங்களைக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. ஆனால், எதிர்முனையில் இருந்து பந்துவீசியபோது என்னால் சிறப்பாக பந்துவீச முடிந்தது. அதனால் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டை வீழ்த்தி அந்த அணியை நெருக்கடிக்கு உள்ளாக்க முடிந்தது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!