தோனி போன்ற சிறந்த வீரரின் தலைமையில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - சொன்னவர் ஷேன் வாட்சன்...

Asianet News Tamil  
Published : Feb 13, 2018, 10:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
தோனி போன்ற சிறந்த வீரரின் தலைமையில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - சொன்னவர் ஷேன் வாட்சன்...

சுருக்கம்

I am interested to play under the leadership of Dhoni - Shane Watson ...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தோனி போன்ற சிறந்த வீரரின் தலைமையில் விளையாடுவதற்கு ஆர்வத்துடன் இருக்கிறேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் கூறினார்.

2008-2015 காலகட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தவர் ஷேன் வாட்சன். கடந்த இரண்டு சீசன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பிடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த சீசனில் ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களம் காண்கிறார்.

இதுகுறித்து ஷேன் வாட்சன், "சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற சிறப்பான அணியிலும், தோனி போன்ற சிறந்த வீரரின் தலைமையிலும் விளையாடுவதற்கு ஆர்வத்துடன் உள்ளேன்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சிஎஸ்கேவின் பிரதான எதிரணி என்பதால் முதலில் ஆடுவதற்கு சற்று வித்தியாசமாக இருக்கும்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், கிரிக்கெட் விளையாடுவதை இப்போதும் விரும்புகிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் இருக்கும் த்ரில்லிங்கை விரும்புகிறேன்" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஷேன் வாட்சன் கடந்த 2016 மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹாரி ப்ரூக் ருத்ரதாண்டவம்.. மேஜிக் இன்னிங்ஸ்.. பாகிஸ்தானை பந்தாடி செமி பைனல் சென்ற இங்கிலாந்து!
ஏற்கனவே 3 டக் அவுட் – அபிஷேக் சர்மாவிற்கு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுக்க காரணம் என்ன?