பாகிஸ்தானுக்காக நான் வேகப் பந்து வீசினேன்.. எனக்கு கிடைத்த பரிசு வலிதான்.. வேதனையில் துடிக்கும் ஷோயப் அக்தர்.

Published : Aug 08, 2022, 01:36 PM ISTUpdated : Aug 08, 2022, 01:41 PM IST
பாகிஸ்தானுக்காக நான் வேகப் பந்து வீசினேன்.. எனக்கு கிடைத்த பரிசு வலிதான்.. வேதனையில் துடிக்கும் ஷோயப் அக்தர்.

சுருக்கம்

தாங்க முடியாத வலியில் இருப்பதால் ரசிகர்கள் தனக்காக பிராத்தனை செய்ய வேண்டுமென பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கோரிக்கை வைத்துள்ளார். 

தாங்க முடியாத வலியில் இருப்பதால் ரசிகர்கள் தனக்காக பிராத்தனை செய்ய வேண்டுமென பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கோரிக்கை வைத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 2000 காலகட்டங்களில் கிரிக்கெட் மைதானத்தில் பேட்டிங் ஜாம்பவான்களை  நடுநடுங்க வைக்கும் வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் ஷோயப் அக்தர். சூறாவளி போல வந்து மின்னல் வேகத்தில் வீசும் பந்துகளால் பேட்ஸ்மேன்களை கொலை நடுங்க வைத்தவர் அத்தர் என்றால் மிகையாகாது. பாக் ரசிகர்களால் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என வர்ணிக்கப்பட்டவர் அவர். தற்போது கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றமுதல் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான முழங்கால் வலியால் வேதனை அடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: காமன்வெல்த் மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிற்கு தங்கம்; இந்தியாவிற்கு வெள்ளி! ஃபைனலில் இந்தியா தோல்வி

பல ஆண்டுகளாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் அவர் தான் விரைவில் குணமடைய வேண்டும் தனது ரசிகர்கள் தனக்காக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் குறித்து பகுப்பாய்வு செய்யும் யூடியூப் சேனல் ஒன்றை அவர் நடத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்:  காமன்வெல்த் போட்டிகள்: 10ம் நாளில் 15 பதக்கங்களை வாரி குவித்த இந்திய வீரர்கள், வீராங்கனைகள்

அதற்கு ஏராளமான சப்ஸ்கிரைப்பர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அதில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. தான் மிகுந்த வேதனையில் இருப்பதால் தனது ரசிகர்கள் தனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது நான் மேலும் 4 அல்லது 5  ஆண்டுகள் கூடுதலாக பாகிஸ்தானுக்காக ஆடி இருக்க முடியும், ஆனால் அப்படி ஆடியிருந்தால் இனி எப்போதும் சக்கர நாற்காலியில் வாழ்நாள் முழுவதும் அமர வேண்டிய துரதிஸ்டசாலியாக தள்ளப்பட்டிருப்பேன் அதனால்தான் முன்கூட்டியே ஓய்வு பெற்று விட்டேன்.

ஆனால் அது முதல் இதுவரை 11 ஆண்டுகளாக வலியில் துடித்து வருகிறேன். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் கடுமையான வலி இருந்து வருகிறது. வேகமாக பந்து வீசுவது ஆபத்துதான், ஆனால்  பாகிஸ்தானுக்காக வலியையும் நான் பெருமையாக நினைக்கிறேன். போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் வலி பயங்கரமாக உள்ளது, பந்துவீச்சுக்கு நாம் கொடுக்கும் விலை இதுதான், வேகமாக பந்து  வீசுவதால் எலும்புகளை நாம் இழக்க நேரிடும், ஆனால் அது பரவாயில்லை பாகிஸ்தானுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் எலும்புகளைக் இழந்தாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

நான் கடுமையான வலியில் இருக்கிறேன், எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுவரை மொத்தம் ஐந்து முறை அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

45,000 கொடுத்தும் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை.. சேர்களை அடித்து நொறுக்கி ரசிகர்கள் ஆவேசம்! போலீஸ் தடியடி!
இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!