Hockey World Cup 2023: கொரியாவை வீழ்த்தி பெல்ஜியம் அபார வெற்றி..! புள்ளி பட்டியல் அப்டேட்

By karthikeyan VFirst Published Jan 14, 2023, 10:53 PM IST
Highlights

ஆடவர் ஹாக்கி உலக கோப்பையில் 2ம் நாள் முடிவில் எந்தெந்த அணிகள் புள்ளி பட்டியலில் எந்தெந்த இடங்களில் இருக்கின்றன என்று பார்ப்போம்.
 

ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடர்  நேற்று ஒடிசாவில் தொடங்கியது. இந்த உலக கோப்பையில் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பிரிவு ஏ - அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், தென்னாப்பிரிக்கா
பிரிவு பி - பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான்
பிரிவு சி - சிலி, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து
பிரிவு டி - இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெய்ன், வேல்ஸ்

BBL: 30 யார்டு வட்டத்தையே தாண்டாத பந்துக்கு சிக்ஸர் கொடுத்த அம்பயர்..! என்ன காரணம்..? வைரல் வீடியோ

நேற்று நடந்த முதல் போட்டியில் ஸ்பெய்னை 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பின்னர் நேற்று நடந்த 3 போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா அணிகள் வெற்றி பெற்றன.

இன்று 4 போட்டிகள் நடந்தன. க்ரூப் சி-யில் இடம்பெற்றுள்ள  நியூசிலாந்து - சிலி அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து - மலேசியா இடையேயான போட்டியில் நெதர்லாந்து அணி 4 கோல்கள் அடிக்க, மலேசியா அணி கோல் கூட அடிக்க முடியாமல் தோற்றது.

ஜெர்மனி - ஜப்பான் இடையேயான போட்டியில் ஜெர்மனி அணி 3-0 என வெற்றி பெற்றது. பெல்ஜியம் - கொரியா இடையேயான போட்டி விறுவிறுப்பாக இருந்தது. பெல்ஜியம் அணி 5 கோல்கள் அடிக்க, கொரியா கோலே அடிக்காமல் 5-0 என தோற்றது. பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்றது.

U19 Womens T20 World Cup: ஷ்வேதா செராவத் அபார பேட்டிங்! தென்னாப்பிரிக்காவை அசால்ட்டா அடித்து காலிசெய்த இந்தியா

பிரிவு ஏ-வில் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜெண்டினா அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன. பிரிவு பி-யில் பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி அணிகளும், பிரிவு சி-யில் நெதர்லாந்து மற்றும் நியூசிலந்து அணிகளும் முதலிரண்டு இடங்களில் உள்ளன.

பிரிவு டி-யில் இங்கிலாந்து அணி முதலிடத்திலும், இந்தியா 2ம் இடத்திலும் உள்ளன.

click me!