தோனிக்கு இப்போ வரைக்கும் அந்த ஷாட் ஆடவும் தெரியல.. கத்துக்கவும் மறுத்துட்டாரு!! முன்னாள் தமிழக வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 29, 2018, 10:43 AM IST
Highlights

தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு பெரும் உதவியாக இருந்துவரும் நிலையில், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவருகிறார். 
 

தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு பெரும் உதவியாக இருந்துவரும் நிலையில், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவருகிறார். 

தோனி ஃபார்ம் இல்லாமல் தவித்துவருகிறார். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை எதிர்கொண்டு ஆட திணறுகிறார். மிடில் ஆர்டரில் இந்திய அணி தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், மிடில் ஆர்டர் வீரர்களுக்கான தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது இந்திய அணி நிர்வாகம். 

உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ள நிலையில் 4 மற்றும் 6வது இடங்களுக்கான சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. 5ம் இடம் தோனிக்குத்தான் என்பது உறுதியான நிலையில், அவர் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் தோனி தொடர்ந்து சொதப்பிவருகிறார்.

ஆசிய கோப்பை தொடரிலும் தோனி சரியாக ஆடவில்லை. ஸ்பின் பவுலர்களை எதிர்கொள்ள திணறுகிறார். அதிலும் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக தொடர்ந்து சொதப்புவதுடன் விக்கெட்டையும் பறிகொடுத்துவிடுகிறார். ஆசிய கோப்பை இறுதி போட்டியில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கடுமையாக போராடி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. 

ஆனால் எளிமையாக வெற்றி பெற வேண்டிய போட்டிதான் இது. 223 ரன்கள் என்பது கடினமான இலக்கு அல்ல. மூன்றாவது விக்கெட்டாக ரோஹித் சர்மா அவுட்டாகும்போது, இந்திய அணி 100 பந்துகளுக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்த தோனி, ரன் ரேட்டை குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள தவறிவிட்டார். தினேஷ் கார்த்திக் பெரிதாக பவுண்டரிகள் அடிக்கவில்லை என்றாலும் சில ஷாட்களை அடிக்க முயன்றார். ஆனால் தோனி சிங்கிள் ஆடி கொடுக்காமல் அதிகமான பந்துகளை டாட் பந்துகளாக்கினார். ஃபீல்டரின் கைக்கு நேராகவே பந்துகளை அடித்தார். 

பெரும்பாலும் மிடில் ஆர்டரில் களமிறங்கும் வீரர்கள், ஸ்பின் பந்துகளை ஸ்வீப் ஷாட் ஆடி பவுண்டரிக்கு அனுப்புவர். இந்திய அணியின் பெருஞ்சுவரும் நங்கூரமுமான ராகுல் டிராவிட் ஸ்பின் பவுலிங்கை அருமையாக ஸ்வீப் ஷாட் ஆடுவார்.

 

ஆனால் தோனி இறங்கிவந்தோ அல்லது இருந்த இடத்தில் இருந்தோ லாங் ஆன் மற்றும் லாங் ஆஃப் திசைகளில் தான் அடிப்பார். அதன்மூலம் சிங்கிள் தான் கிடைக்கும். பல நேரங்களில் அதுகூட கிடைக்காது. பந்து நேராக ஃபீல்டரின் கைக்கு நேரே சென்றுவிடும்.

மிடில் ஓவர்களில் தோனி அதிகமான பந்துகளை வீணடிப்பது, அவருக்கு மட்டுமல்லாமல் எதிரே நிற்கும் வீரருக்கும் அணிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே மிடில் ஓவர்களில் ஸ்பின் பவுலிங்கை ஸ்வீப் ஆடுவது முக்கியம். ஆனால் தோனி ஸ்வீப் ஷாட் ஆட மாட்டார். 

இதுதொடர்பாக பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரும் தமிழ் வர்ணனையாளருமான ஹேம்ங் பதானி, தோனிக்கு ஸ்வீப் ஷாட் ஆட வரவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் ஒருவாரம் தன்னிடம் வந்து ஸ்வீப் ஷாட் ஆட பயிற்சி எடுத்துக்கொள்ளுமாறு தோனியிடம் வலியுறுத்தியதாகவும், ஆனால் தோனி தனக்கு ஸ்டிரைட் ஷாட் மற்றும் லெக் திசை ஷாட்கள் எளிதாக வரும் எனக்கூறி மறுத்துவிட்டதாக ஹேமங் பதானி தெரிவித்தார். 

click me!