ஜடேஜாவின் வேற லெவல் ஃபீல்டிங்.. பதற்றமே படாமல் ஜடேஜா செய்த மிரட்டலான ரன் அவுட்டின் வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Sep 29, 2018, 9:46 AM IST
Highlights

ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வங்கதேச வீரர் மிதுனை ஜடேஜா அபாரமாக ஃபீல்டிங்கால் ரன் அவுட் செய்து வெளியேற்றினார். மிரள வைக்கும் அந்த ரன் அவுட்டின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 

14வது ஆசிய கோப்பை இறுதி போட்டி துபாயில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பவுலிங் செய்ய விரும்பியதால் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் மற்றும் மெஹிடி ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 120 ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறிய இந்திய அணிக்கு கேதர் ஜாதவ் பிரேக் கொடுத்தார். 

மெஹிடியை 32 ரன்களில் கேதார் வீழ்த்தினார். இதையடுத்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. ஆனால் மறுமுனையில் நிதானமாக ஆடிய லிட்டன் தாஸ் சதமடித்தார். லிட்டன் தாஸின் சதத்தால் அந்த அணி 200 ரன்களை கடந்தது. 48.3 ஓவரில் 222 ரன்களுக்கு வங்கதேச அணி ஆல் அவுட்டானது. 

223 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் அபாரமாக தொடங்கினர். ஆனால் ஷிகர் தவான் தேவையில்லாத ஷாட் ஆடி கேட்ச் கொடுத்து வெளியேற, அவரை தொடர்ந்து 2 ரன்களில் ராயுடுவும் வெளியேறினார். ரோஹித் சர்மா 48 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு தினேஷ் கார்த்திக், தோனி, கேதார் ஜாதவ், ஜடேஜா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தங்களது பங்களிப்பை வழங்கி ஒரு வழியாக அணியை வெற்றி பெற செய்தனர்.

இந்த போட்டியில் வங்கதேச அணியின் பேட்டிங்கின்போது, முதல் விக்கெட்டை வீழ்த்தியபிறகு இம்ருல் கெய்ஸ் மற்றும் ரஹீம் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். அதன்பிறகு நான்காவது விக்கெட்டுக்கு லிட்டன் தாஸுடன் ஜோடி சேர்ந்த மிதுன், சாஹல் வீசிய 28வது ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட்டானார். சாஹல் வீசிய பந்தை லிட்டன் தாஸ் அடிக்க, வேகமாக சென்ற பந்தை தாவிப்பிடித்த ஜடேஜா, தோனிக்கு வீச முயன்றார். ஆனால் லிட்டன் தாஸ் மற்றும் மிதுன் ஆகிய இருவருமே பேட்டிங் கிரீஸுக்கு அருகே நின்றனர். அதனால் தோனி பவுலரிடம் வீசுமாறு ஜடேஜாவிற்கு கைகாட்டினார். அந்த நேரத்தில் பதற்றப்படாமல் தோனியின் வழிகாட்டுதலின் படி சாஹலிடம் வீசினார் ஜடேஜா. 

பந்தை சரியாக பிடித்து ரன் அவுட் செய்தார் சாஹல். மிதுன் அவுட்டானார். அபாரமான ரன் அவுட் இது. உலகின் தலைசிறந்த ஃபீல்டரான ஜடேஜா 1.48 நொடிகளில் 6.61 மீட்டர் தொலைவை கவர் செய்து பந்தை பிடித்தார். ஜடேஜா செய்த அபாரமான ரன் அவுட்டின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

pic.twitter.com/ncl3xVBthV

— Kabali of Cricket (@KabaliOf)
click me!