2018ம் ஆண்டின் சிறந்த வீரர்களைக் கொண்ட டெஸ்ட் அணி!!

By karthikeyan VFirst Published Dec 29, 2018, 3:43 PM IST
Highlights

2018ம் ஆண்டை பொறுத்தமட்டில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி, பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் ஆகியவை மிகவும் பரபரப்பான போட்டிகளாக அமைந்தன. 
 

2018ம் ஆண்டில் டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்ட 2018ம் ஆண்டின் சிறந்த டி20 அணியையும் அதேபோல சிறந்த 11 வீரர்களை கொண்ட ஒருநாள் அணியையும் ஹர்ஷா போக்ளே தேர்வு செய்திருந்தார். தற்போது 2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார். 

2018ம் ஆண்டை இந்திய அணி தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருடன் தொடங்கியது. ஆண்டின் முடிவில் தற்போது ஆஸ்திரேலியாவுடன் ஆடிவருகிறது. இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்திய அணிக்கு சிறப்பானதாக இல்லை. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய வெளிநாட்டு தொடர்களில் தோல்வியை தழுவியது. வெஸ்ட் இண்டீஸ் தொடரையும், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியையும் வென்ற இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிவருகிறது. 

2018ம் ஆண்டை பொறுத்தமட்டில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி, பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் ஆகியவை மிகவும் பரபரப்பான போட்டிகளாக அமைந்தன. 

வழக்கம்போலவே இந்த ஆண்டும் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்கிறார். அதேபோல இந்த ஆண்டில் தென்னாப்பிரிக்க தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பும்ரா, அறிமுக ஆண்டிலேயே பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இப்படியாக இந்த ஆண்டு நிறைவடையும் நிலையில், 2018ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்டு சிறந்த அணியை தேர்வு செய்துள்ளார் ஹர்ஷா போக்ளே. 

அதன்படி. இந்த ஆண்டில் சிறப்பாக ஆடிய நியூசிலாந்தின் டாம் லதாம் மற்றும் இலங்கையின் கருணரத்னே ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார். மூன்றாம் வரிசை வீரராக நியூசிலாந்து கேப்டனும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இரண்டாமிடத்திலும் உள்ள கேன் வில்லியம்சனையும் நான்காம் வரிசை வீரராக சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலியையும் தேர்வு செய்துள்ளார். 

சர்வதேச போட்டிகளிலிருந்து இந்த ஆண்டு ஓய்வு அறிவித்த ஒன் அண்ட் ஒன்லி டிவில்லியர்ஸை ஐந்தாம் வரிசை வீரராக ஹர்ஷா தேர்வு செய்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் பின்வரிசையில் களமிறங்கி இந்திய அணிக்கு பல தருணங்களில் நெருக்கடி கொடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த ஜோஸ் பட்லரை 6ம் வரிசை வீரராக தேர்வு செய்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸின் ஜேசன் ஹோல்டர், அறிமுக ஆண்டிலேயே அபாரமாக பந்துவீசி சாதனை படைத்த பும்ரா, ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோரும் ஹர்ஷா போக்ளேவின் சிறந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். 

ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த 2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி:

டாம் லதாம், கருணரத்னே, கேன் வில்லியம்சன், விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஜோஸ் பட்லர், ஜேசன் ஹோல்டர், பாட் கம்மின்ஸ், நாதன் லயன், பும்ரா, முகமது அப்பாஸ்.

click me!