உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி!! ஹர்ஷா போக்ளே தேர்வு

By karthikeyan VFirst Published Feb 12, 2019, 2:01 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், இரண்டு முறை உலக கோப்பையை வென்ற கேப்டனும் மூன்றுமுறை உலக கோப்பையை வென்ற அணியில் ஆடியவருமான ரிக்கி பாண்டிங், உலக கோப்பைக்கு ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

உலக கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

தற்போதைய சூழலில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. இரு அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளன. எனவே இரு அணிகளில் ஒரு அணிதான் உலக கோப்பையை வெல்லும் என்று பிரயன் லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். 

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கான கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. முதல் 3 வீரர்களான ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி என வேகப்பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. குல்தீப் யாதவ் சுழலில் மிரட்டுகிறார். இவ்வாறு நல்ல கலவையிலான வலுவான அணியாக இந்திய அணி திகழ்கிறது. இங்கிலாந்து அணியும் வலுவாக உள்ளது. 

இந்தியாவும் இங்கிலாந்தும் வலுவாக உள்ள அதேநிலையில், 5 முறை உலக கோப்பையை வென்ற சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவி துவண்டு போயுள்ளது. 

ஆஸ்திரேலிய அணிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், இரண்டு முறை உலக கோப்பையை வென்ற கேப்டனும் மூன்றுமுறை உலக கோப்பையை வென்ற அணியில் ஆடியவருமான ரிக்கி பாண்டிங், உலக கோப்பைக்கு ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரிக்கி பாண்டிங் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதே அந்த அணிக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

உலக கோப்பைக்கான அணிகளில் இடம்பெறும் வீரர்களை தெரிந்துகொள்வதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வமாக உள்ளது. ஸ்மித் மற்றும் வார்னரின் வருகையை எதிர்நோக்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி. தற்போதைக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் வலுவான அணிகளாக திகழ்ந்தாலும் ஸ்மித்தும் வார்னரும் வந்துவிட்டால் ஆஸ்திரேலியாதான் வலுவான அணி என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, 15 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணியை தேர்வு செய்துள்ளார். 

ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த 15 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி:

ஃபின்ச், வார்னர், ஸ்மித், ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், டார்ஷி ஷார்ட், ஆடம் ஸாம்பா, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ரிச்சர்ட்ஸன், குல்ட்டர்நைல்/ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லயன்/ஆஷ்டான் அகர்.
 

click me!