தோனி இல்லாத ஆசிய கோப்பை அணி!! ரசிகர்கள் அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Sep 28, 2018, 1:54 PM IST
Highlights

கிரிக்கெட் ஆய்வாளரும் வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே, நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சிறந்த 11 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார். அதில் அவர் தோனிக்கு இடம் கொடுக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்று விளக்கமளித்துள்ளார். 
 

கிரிக்கெட் ஆய்வாளரும் வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே, நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சிறந்த 11 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார். அதில் அவர் தோனிக்கு இடம் கொடுக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்று விளக்கமளித்துள்ளார். 

14வது ஆசிய கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்த தொடரின் இறுதி போட்டி இன்று நடக்கிறது. துபாயில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் இறுதி போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும் மோதுகின்றன. 

இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி ரோஹித் சர்மாவின் தலைமையின்கீழ் சிறப்பாக ஆடிவருகிறது. ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளும் இந்த தொடரில் சிறப்பாக ஆடின. ஆனால் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. 

இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் அருமையாக ஆடிவருகின்றனர். அபாரமாக ஆடி எதிரணிகளை மிரட்டிவருகின்றனர். அதேபோல இந்திய அணியின் புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய இருவரும் வேகப்பந்துவீச்சில் மிரட்டுகின்றனர். இந்த தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான் மற்றும் முகமது நபி ஆகியோர் மிகச்சிறப்பாக ஆடினர். பாகிஸ்தான் அணியை பொறுத்தமட்டில் ஷோயப் மாலிக் மட்டுமே நம்பிக்கை அளித்தார்.

இந்நிலையில், இந்த ஆசிய கோப்பை தொடரின் சிறந்த 11 வீரர்களை கொண்ட ஒரு அணியை ஹர்ஷா போக்ளே தேர்வு செய்துள்ளார். அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் தவானையும் மூன்றாம் வரிசையில் ராயுடுவையும் நான்காம் வரிசை வீரராக வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹீமையும் தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் தோனிக்கு இடம் கொடுக்கவில்லை. பவுலர்கள் புவனேஷ்வர் குமார், பும்ரா, ரஷீத் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, முஷ்ஃபிகுர் ரஹீம், ஷோயப் மாலிக், முகமது நபி, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், பும்ரா, முஸ்தாபிசுர் ரஹ்மான்.

இந்த அணியில் தோனியை தேர்வு செய்யாதது விளக்கமளித்த ஹர்ஷா போக்ளே, ஆல்டைம் கனவு அணி என்றால் முதல் தேர்வாக தோனி தான் இருப்பார். ஆனால் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அணி என்பதால்தான் இதில் தோனியை தேர்வு செய்யவில்லை என விளக்கமளித்தார்.
 

click me!