44th Chess Olympiad: நிறைமாத கர்ப்பணியாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் ஆந்திராவின் ஹரிகா

Published : Jul 27, 2022, 02:08 PM IST
44th Chess Olympiad: நிறைமாத கர்ப்பணியாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் ஆந்திராவின் ஹரிகா

சுருக்கம்

ஆந்திராவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் துரோணவள்ளி ஹரிகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும், சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கிறார்.

ஆந்திராவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் துரோணவள்ளி ஹரிகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும், சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கிறார்.

இந்தியாவின் மகளிர் அணியில், கொனேரு ஹம்பி, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்திகுல்கர்னி ஆகியோருடன் சேர்ந்து ஹரிகாவும் களமிறங்குகிறார்.

இன்னும் ஒரேயொரு வெற்றி.. ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைக்கப்போகும் இந்தியா

சென்னை மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட்  போட்டிகள் நாளை தொடங்குகின்றன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் 30 வீரர், வீராங்கனைகள் 6 பிரிவுகளாகக் களமிறங்குகிறார்கள். 

இதில் மகளிர் சீனியர் பிரிவில் இருக்கும்  ஆந்திராவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் துரோணவள்ளி ஹரிகா(வயது31) நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். சர்வதேச தரவரிசையில் 11வது இடத்தில் இருக்கும் ஹரிகா தங்கப்பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளார். ஹரிகா சிறுவயதிலேயே அதாவது தன்னுடைய 9 மற்றும் 10வது வயதில் தேசிய அளவிலான செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர்.

ஒருநாள் கிரிக்கெட்டை சுவாரஸ்யமாக்க அஃப்ரிடியின் ஐடியாவை வழிமொழியும் ரவி சாஸ்திரி..! இதுகூட நல்லாத்தான் இருக்கு

ஹரிகாவின் செஸ் சாதனையைப் பாராட்டி கடந்த 2008ம் ஆண்டில் மத்திய அரசு அர்ஜூனா விருதும், 2019ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் வழங்கி கவுரவித்தது. 2012,2015,2017ம் ஆண்டு நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்ஹரிகா வெண்கலப் பதக்கம் வென்றவர். 

துரோணவள்ளி ஹரிகா சமீபத்தில் டைம் ஆப் இந்தியா நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், “ செஸ் ஒலிம்பியாட்டுக்கு தயாராவது சிறப்பான விஷயம். என்னுடைய உடல்நிலையையும், ஒலிம்பியாட்டுக்கு தயாராவதையும் சமநிலையில் வைத்திருக்கிறேன். எனக்கு ஆதரவாக இருக்கும் கணவர் கார்த்தி, குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்

விராட் கோலி பற்றி ஒரு வார்த்தை.. ரசிகரின் கேள்விக்கு அக்தரின் தரமான பதில்

ஹரிகாவுக்கு அவரின் குடும்பத்தார் மட்டுமல்ல அவரின் பயிற்சியாளர் அபிஜித் குந்தே, அனைத்து இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளர் பரத் சிங் சவுகான் ஆகியோரும் ஆதரவாக இருந்தனர்.


 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Sakib Hussain Net Worth: முதல் மேட்ச்லயே 4 விக்கெட்! யார் இந்த சகிப் ஹுசைன்? சொத்து மதிப்பு எவ்வளவு?
Sakib Hussain: 'ஷூ வாங்க காசு இல்ல'னு அழுத மகன்.. நகையை விற்ற தாய்! SRH வீரரின் பகீர் பின்னணி..