தோனி மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஹர்திக் பாண்டியா செய்த செயல்.. கையும் களவுமாக பிடிபட்ட கொடுமை

By karthikeyan VFirst Published Nov 19, 2018, 3:17 PM IST
Highlights

தோனியின் மனைவி சாக்ஸியின் 29வது பிறந்தநாள் விழா மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. 
 

தோனியின் மனைவி சாக்ஸியின் 29வது பிறந்தநாள் விழா மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டுமே தோனி இடம்பெற்றுள்ளதால், ஆஸ்திரேலியாவிற்கு தோனி செல்லவில்லை. முதலில் டி20 தொடர், அதன்பிறகு டெஸ்ட் தொடர் ஆகியவை முடிந்தபிறகுதான் ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. ஜனவரி மாதத்தில் தான் ஒருநாள் தொடர் தொடங்க இருப்பதால் தோனி ஆஸ்திரேலிய செல்லவில்லை, இந்தியாவில்தான் உள்ளார். 

அதேபோல காயத்திலிருந்து முழுவதுமாக குணமடையாத ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறாததால் இந்தியாவில்தான் உள்ளார். 

எனவே தோனி மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஹர்திக் பாண்டியாவும் கலந்துகொண்டார். நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரத்துடன் இந்த பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தோனியின் மனைவி சாக்ஸி, கேக் வெட்டிக்கொண்டிருக்கும்போது, தோனியின் பின்னால் நின்ற ஹர்திக் பாண்டியா, சிகரெட்டா அல்லது வேறு எதுவுமா என்று தெரியவில்லை, ஆனால் எதையோ புகைக்கிறார். பின்னர் புகை வெளிவருகிறது. அது அரசல் புரசலாக வீடியோவில் பதிவாகிவிட்டது. ஹர்திக் பாண்டியா புகைப்பதை, அந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் கையும் களவுமாக பிடித்துவிட்டனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Cake cutting 😍😍 #SakshiDhoni #Msdhoni

A post shared by Sakshi Singh Dhoni FC 🍓 (@_sakshisingh_r) on Nov 17, 2018 at 11:52am PST

click me!