லட்சுமணனை கௌரவப்படுத்த தோனி செய்த செயல்!! மிரண்டுபோன வீரர்கள்.. உருக்கத்துடன் உண்மையை வெளியிட்ட லட்சுமணன்

By karthikeyan VFirst Published Nov 19, 2018, 2:53 PM IST
Highlights

2001ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை நோக்கி சென்ற இந்திய அணியை ராகுல் டிராவிட்டுடன் இணைந்து மீட்டெடுத்தவர் லட்சுமணன். அந்த போட்டியில் அவர் அடித்த 281 ரன்கள் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத ஸ்கோர்.
 

இந்திய அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக வலம்வந்தவர் லட்சுமணன். நான்காவது இன்னிங்ஸில் பலமுறை போராடி இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தவர். அதனாலேயே நான்காம் இன்னிங்ஸ் நாயகன் என்றுகூட அழைக்கப்படுபவர். அதிலும் 2001ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை நோக்கி சென்ற இந்திய அணியை ராகுல் டிராவிட்டுடன் இணைந்து மீட்டெடுத்தவர் லட்சுமணன். அந்த போட்டியில் அவர் அடித்த 281 ரன்கள் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத ஸ்கோர்.

1996ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது டெஸ்ட் வாழ்க்கையை ஆரம்பித்த லட்சுமணன், 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 17 சதம், 56 அரைசதம் உட்பட 8781 ரன்கள் குவித்து கடந்த 2012ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் லட்சுமணன். 

அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அபாரமான இன்னிங்ஸ் 281 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த இன்னிங்ஸ்தான். இந்நிலையில், தனது சுயசரிதையை 281 அண்ட் பியாண்ட் என்ற பெயரில் எழுதியுள்ளார். அதில், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சுவாரஸ்யமாக எழுதியுள்ள லட்சுமணன், தோனியுடனான அவரது நாட்களை விளக்கமாக எழுதியுள்ளார். 

லட்சுமணனின் ஓய்வு சமயத்தில் தோனிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக ஒரு தகவல் உண்டு. அது பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில், அந்த சுயசரிதையில் தோனியுடனான நாட்கள் குறித்து எழுதியுள்ள லட்சுமணன், அவருடனான நினைவுகளையும் தன்னை கௌரவப்படுத்த தோனி பஸ் ஓட்டியதையும் விவரித்துள்ளார். 

தோனி குறித்து எழுதியுள்ள லட்சுமணன், கும்ப்ளே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு தோனி டெஸ்ட் அணியின் கேப்டன் ஆனார். நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி எனக்கு 100வது டெஸ்ட் போட்டி. அதுதான் தோனி கேப்டன் பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் போட்டி. அந்த போட்டியில் நான் சதமடித்தேன். இந்த போட்டி முடிந்து மைதானத்திலிருந்து ஹோட்டலுக்கு செல்வதற்காக வீரர்கள் அனைவரும் பேருந்தில் ஏறினோம். திடீரென ஓட்டுநர் இடத்திற்கு சென்ற தோனி, ஓட்டுநரை எழுப்பிவிட்டு அவரே பேருந்தை ஓட்டினார். அந்த நேரத்தில் தனக்கு தோன்றியதை யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அவர் செய்ததையும் என்னை கௌரவப்படுத்தும் வகையில் அந்த பேருந்தை இயக்கியதையும் பார்த்து நான் வியந்துபோனேன். ஒரு கேப்டனாக ஜாலியாக பேருந்தில் அமர்ந்து வர வேண்டிய தோனி, பேருந்தை ஓட்டுகிறாரே என்று நினைக்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. 

தோனி மிகவும் விளையாட்டுத்தனமான மனிதர் தோனி. எப்போதும் மகிழ்ச்சியாகவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்வித்துக் கொண்டே இருப்பார். இதுபோன்ற சிறந்த மனிதரை இதற்கு முன் நான் சந்தித்ததில்லை என்று தோனியை புகழ்ந்து எழுதியுள்ளார் லட்சுமணன்.
 

click me!