அவருகிட்ட பேசுனேன்.. வர சொன்னாரு போனேன்!! குல்தீப்பை கூப்பிட்டு என்ன சொன்னார் வார்னே..? சைனாமேன் பகிர்ந்த ரகசியம்

By karthikeyan VFirst Published Nov 19, 2018, 2:04 PM IST
Highlights

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள குல்தீப் யாதவ், ஆஸ்திரேலியாவிலும் மிரட்டும் முனைப்பில் உள்ளார். இந்நிலையில், இந்தியா டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் வார்னேவிடம் ஆலோசனை பெற்றது குறித்து பகிர்ந்துள்ளார் குல்தீப்.
 

ஆஸ்திரேலியாவில் எப்படி பந்துவீச வேண்டும் என்று சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னேவிடம் பெற்ற ஆலோசனைகளின் படி பந்துவீச உள்ளதாக சைனாமேன் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். 

அஷ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு பதிலாக குல்தீப் மற்றும் சாஹல் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பெற்று சிறப்பாக பந்துவீசி, நிரந்தர இடத்தை பிடித்தனர். இவர்களில் குல்தீப் யாதவ், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை கடந்து டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்தார். தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ், இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராகிவிட்டார். 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள குல்தீப் யாதவ், ஆஸ்திரேலியாவிலும் மிரட்டும் முனைப்பில் உள்ளார். இந்நிலையில், இந்தியா டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் வார்னேவிடம் ஆலோசனை பெற்றது குறித்து பகிர்ந்துள்ளார் குல்தீப்.

இதுகுறித்து பேசிய குல்தீப், நான் எப்போதுமே வார்னேவை ஃபாலோ செய்வேன். அவரிடமிருந்து ஆலோசனைகளை பெறுவேன். அந்த வகையில் ஆஸ்திரேலிய தொடர் தொடங்க உள்ள நிலையில், வார்னேவை தொடர்புகொண்டேன். அவரது அழைப்பின்பேரில் அவரை சந்தித்தேன். அப்போது வார்னே ஆஸ்திரேலியாவில் எப்படி பந்துவீச வேண்டும் என்று சில ஆலோசனைகளை வழங்கினார். நார்மலாக பந்துவீசுமாறும் ஆங்கிளை மாற்றி மாற்றி வீசுமாறும் அறிவுறுத்தினார். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பவுன்ஸ் கூடுதலாக இருக்கும். எனவே அதை எனக்கு சாதகமாக பயன்படுத்தி வீசுவேன். ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டால் ஆஸ்திரேலிய தொடரை வெல்லலாம் என்று குல்தீப் நம்பிக்கை தெரிவித்தார். 
 

click me!