பேட்டியில கெத்து காட்டுறது இருக்கட்டும் சாஸ்திரி சார்.. நம்ம ஆளுங்க பேட்டிங்குல கெத்து காட்டுவாங்களா..?

By karthikeyan VFirst Published Nov 19, 2018, 12:35 PM IST
Highlights

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் அபாரமாக உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலிய அணி பலவீனமாக இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் கேள்வி எழுப்பி பதிலளித்துள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆட உள்ளது. வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் இந்திய அணிக்கு இந்த தொடர் முக்கியமானது என்பதால் இதில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. 

அதேநேரத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இரண்டு நட்சத்திர வீரர்களை இழந்து சொந்த மண், வெளிநாடு என்ற பேதமில்லாமல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவரும் ஆஸ்திரேலிய அணிக்கும் இது ரொம்ப முக்கியமான தொடர். தொடர் தோல்வியிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் தீவிரத்தில் உள்ளது. 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் அபாரமாக உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் அசால்டாக இல்லாமல் கவனமாகவும் பொறுப்புடனும் நிதானமாகவும் ஆட வேண்டியது அவசியம். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம், ஆஸ்திரேலிய அணி பலவீனமாக உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, ஆஸ்திரேலிய அணியை பலவீனமான அணி என்று நான் கருதவில்லை. சொந்த மண்ணில் அனைத்து அணிகளுமே வலிமையான அணிதான். இந்தியாவுக்கு எந்த அணியாவது பயணம் வரும்போது, எங்கள் வீரர்கள் ஒரு சிலர் சரியாக ஆடவில்லை என்றால், உடனே இந்திய அணியை பலவீனமான அணி என்று சொல்லவிட முடியுமா? ஒருவேளை நீங்கள் அப்படி சொன்னால் அது வியப்பான விஷயம்தான். அதனால் ஒரு சில போட்டிகளில் தோற்பதால் மட்டுமே ஒரு அணியை பலவீனமான அணி என்று சொல்லிவிட முடியாது என்று சாஸ்திரி தெரிவித்தார். 

இந்திய மண்ணில் நாங்கதான் மாஸ் எனும்வகையில் மார்தட்டிக்கொண்டார் சாஸ்திரி. பேட்டியில் நல்லா கெத்தாகத்தான் பேசியிருக்கிறார் சாஸ்திரி. ஆனால் இதே கெத்தை நம்ம டீம் பேட்டிங்கிலும் காட்டினால் சரிதான். 
 

click me!