தலைசிறந்த வீரரை ஒதுக்குறீங்களே.. நீங்க மட்டும் அவரை டீம்ல எடுங்க.. அப்புறம் பாருங்க!! டெல்லி டேர்டெவில்ஸுக்கு தாதா ஆலோசனை!!

By karthikeyan VFirst Published Nov 19, 2018, 11:20 AM IST
Highlights

டெல்லி டேர்டெவில்ஸ் அணி, கவுதம் காம்பீரை விடுவித்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியிடமிருந்து ஷிகர் தவானை பெற்ற டெல்லி அணி அவருக்கு பதிலாக விஜய் சங்கர், நதீம், அபிஷேக் ஆகிய மூவரையும் அந்த அணிக்கு கொடுத்துள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவருமான ஜோ ரூட்டை அடுத்த ஐபிஎல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி எடுக்குமாறு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஆலோசனை வழங்கியுள்ளார். 

இதுவரை 11 ஐபிஎல் சீசன்கள் முடிந்துள்ள நிலையில், ஐபிஎல் கோப்பையை ஒருமுறை வென்றிராத மூன்று அணிகளில் டெல்லி டேர்டெவில்ஸும் ஒன்று. எவ்வளவோ முட்டி மோதியும் அந்த அணியால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. 

எனவே அடுத்த சீசனில் கோப்பையை வெல்லும் தீவிரத்தில் மூன்று அணிகளும் உள்ளன. அடுத்த மாதம் 16ம் தேதி 12வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் நடக்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. 

டெல்லி டேர்டெவில்ஸ் அணி, கவுதம் காம்பீரை விடுவித்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியிடமிருந்து ஷிகர் தவானை பெற்ற டெல்லி அணி அவருக்கு பதிலாக விஜய் சங்கர், நதீம், அபிஷேக் ஆகிய மூவரையும் அந்த அணிக்கு கொடுத்துள்ளது. மேலும் இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல், முகமது ஷமி, பிளங்கெட், ஜூனியர் டாலா, நமன் ஓஜா, டான் கிறிஸ்டியன், குருகிரீத் மான் ஆகியோரையும் விடுவித்துள்ளது. 

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன்  ஜோ ரூட்டின் அபார சதத்தை கண்டு வியந்துபோன கங்குலி, டுவிட்டரில் அவரை பாராட்டியதோடு, டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டாலை டேக் செய்திருந்தார். இதன்மூலம் ஜோ ரூட்டை அடுத்த சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று கங்குலி அறிவுறுத்தும் விதமாகவே அவரை பெயரை டேக் செய்திருக்கிறார் என்று கருதப்படுகிறது. 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ரூட் திகழ்ந்தாலும் அவர் அதிரடியாக ஆடக்கூடிய வீரர் கிடையாது என்பதற்காக அவர் ஐபிஎல்லில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், டெல்லி அணி அவரை எடுக்குமாறு மறைமுகமாக கங்குலி அறிவுறுத்தியுள்ளார். 
 

click me!