பெருந்தன்மையுடன் மன்னிப்பு கேட்ட ஜோ ரூட்.. வியந்து பாராட்டிய ரோஹித் சர்மா

By karthikeyan VFirst Published Nov 19, 2018, 10:47 AM IST
Highlights

இலங்கையின் கண்டி நகரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண்பதற்காக பல மாதங்களுக்கு முன்பாகவே இங்கிலாந்து ரசிகர்கள் 100 பேர், மைதானத்துக்கு அருகே இருக்கும் ஹோட்டல் ஒன்றில் அறைகளை முன்பதிவு செய்தனர். போட்டியைக் காண ஆவலாக வந்த இங்கிலாந்து ரசிகர்கள், அந்த ஹோட்டலில் தங்க அனுமதிக்கப்படவில்லை. 

இங்கிலாந்து ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்த அறையை இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கிவிட்டு ரசிகர்கள் அலைக்கழிக்கப்பட்டதற்காக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ரசிகர்களிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரினார். 

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-0 என தொடரை வென்றது. 

இந்நிலையில், இலங்கையின் கண்டி நகரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முடிந்தது. இந்த போட்டியை காண்பதற்காக பல மாதங்களுக்கு முன்பாகவே இங்கிலாந்து ரசிகர்கள் 100 பேர், மைதானத்துக்கு அருகே இருக்கும் ஹோட்டல் ஒன்றில் அறைகளை முன்பதிவு செய்தனர். போட்டியைக் காண ஆவலாக வந்த இங்கிலாந்து ரசிகர்கள், அந்த ஹோட்டலில் தங்க அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் செலுத்திய பணத்தை திருப்பி கொடுத்து மைதானத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். 

இதற்கு காரணம் இலங்கை கிரிக்கெட் வாரியம்தான். ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்த ஹோட்டல் அறைகள் முழுவதையும் இங்கிலாந்து வீரர்களை தங்கவைப்பதற்காக மொத்தமாக இலங்கை கிரிக்கெட் வாரியம் கைப்பற்றியது. அதனால்தான் ரசிகர்களை அங்கு தங்கவைக்காமல் வேறு ஒரு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயல் இங்கிலாந்து ரசிகர்களை வெகுவாக பாதித்ததோடு, கோபமும் விரக்தியும் அடைந்தனர் ரசிகர்கள்.

இந்த விவகாரம் இங்கிலாந்து வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் தாங்கள் ஆடுவதை பார்க்க ஆவலுடன் வந்த தங்கள் நாட்டு ரசிகர்கள் சிரமமடைந்ததை நினைத்து இங்கிலாந்து வீரர்கள் வருத்தப்பட்டனர். இதையடுத்து போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் வீரர்கள் அனைவரும் அந்த 100 ரசிகர்களையும் சந்தித்து மன்னிப்பு கேட்டனர். மேலும் தங்களின் நிலையை கூறி வருத்தமும் தெரிவித்தனர். 

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் செயலை கண்டு ரசிகர்கள் நெகிழ்ந்து பாராட்டினர். அத்துடன் நிறுத்தாமல் தானே எழுதிய மன்னிப்பு கடித்தத்தை 100 பேரிடமும் கொடுத்துள்ளார் ஜோ ரூட். ரூட்டின் பெருந்தன்மையான இந்த செயலுக்கு இந்திய அணியின் அதிரடி வீரர் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். 

Great gesture by good looking out 👏 pic.twitter.com/xJ4Pqj3Uw9

— Rohit Sharma (@ImRo45)
click me!