இந்திய வீரர்களை வீழ்த்த மொயின் அலிக்கு வியூகம் வகுத்து கொடுத்த ஹர்பஜன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்

By karthikeyan VFirst Published Sep 10, 2018, 5:16 PM IST
Highlights

தன்னிடம் ஆலோசனை கேட்டு அதன்படியே மொயின் அலி பந்துவீசியதற்கு ஹர்பஜன் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 
 

தன்னிடம் ஆலோசனை கேட்டு அதன்படியே மொயின் அலி பந்துவீசியதற்கு ஹர்பஜன் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றுவிட்ட நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. 

இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணியில் ஆடாத மொயின் அலி, நான்காவது போட்டியில் களமிறக்கப்பட்டார். அந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார். அந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் மொயின் அலி. 

அந்த பிட்ச்சில் இருந்த ரஃப் பேட்சஸ்களில் பந்தை சரியாக பிட்ச் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதை செய்ய அஷ்வின் தவறியதால்தான் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், ஓவலில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியின் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் மொயின் அலி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங்கின்போது, சரியாக சோபிக்காத மொயின் அலி, இந்திய அணியின் முன்னாள் ஸ்பின் பவுலர் ஹர்பஜன் சிங்கிடம் ஆலோசனை கேட்டுள்ளார். 

சிறப்பு வர்ணனையாளராக இருக்கும் ஹர்பஜன் சிங்கிடம் ஆலோசனை கேட்டுள்ளார் மொயின் அலி. இதுதொடர்பாக பேசியுள்ள ஹர்பஜன் சிங், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ரஃப்பான இடங்களில் சரியாக பந்துவீசவில்லை என கருதிய மொயின் அலி, என்னிடம் ஆலோசனை கேட்டார். நான் அவரிடம், சரியாகத்தான் வீசிக்கொண்டிருக்கிறீர்கள். ஆடுகளத்தின் ரஃப்பான இடங்களில் பந்தை பிட்ச் செய்ய அதிகமாக முயற்சிக்கிறீர்கள். அதை குறைத்துக்கொள்ளுங்கள். அதிகமான விரிசல்கள் இல்லாத இதுபோன்ற ஆடுகளத்தில் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்யுங்கள் என்று கூறினேன். எனது ஆலோசனையின்படியே மொயின் அலி பந்துவீசியதை பார்த்தது சிறப்பாக இருந்தது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

ஹர்பஜன் சிங்கிடம் ஆலோசனை பெற்றபிறகே ஹனுமா விஹாரி மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இரண்டு விக்கெட்டுகளையும் மொயின் அலி வீழ்த்தியுள்ளார்.
 

click me!