
இந்திய பாட்மிண்டன் வீரர் ஹெச்.எஸ்.பிரணாய் ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் முன்னேற்றக் கண்டு 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய பாட்மிண்டன் வீரர் ஹெச்.எஸ்.பிரணாய் ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். இவர், இந்த இடத்துக்கு வருவது இது முதல் முறையாகும்.
முன்னதாக 10-வது இடத்தில் இருந்த பிரணாய், கடந்த வாரம் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.
இதேபோல, மற்றொரு இந்தியரான ஸ்ரீகாந்த் இரண்டு இடங்கள் முன்னேறி உலகின் 3-ஆம் நிலை வீரராக உயர்ந்துள்ளார்.
அதேபோன்று, மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நெவால் 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்துக்கு வந்துள்ளார். மூன்று மாதங்களுக்குப் பிறகு உலகின் முதல் 10 இடங்களுக்குள் சாய்னா வருகிறார் என்பது கொசுறு தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.