இந்த 3 பேரையும் டீம்ல இருந்து தூக்குங்க!! எல்லாம் சரியாகிடும்.. கவாஸ்கரின் அதிரடியால் கதிகலங்கிய வீரர்கள்

By karthikeyan VFirst Published Sep 4, 2018, 5:45 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்த கவாஸ்கர், அதுகுறித்து விளக்கமளித்துள்ளார். 
 

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்த கவாஸ்கர், அதுகுறித்து விளக்கமளித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்து வென்றது. இந்திய அணியின் சொதப்பலான பேட்டிங்கால்தான் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. இந்த தொடரில் விராட் கோலி, புஜாரா, ரஹானே மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகியோரை தவிர மற்ற யாரும் சரியாக ஆடவில்லை. இவர்களை தவிர மற்றவர்கள் அணிக்கு தேவையான பங்களிப்பை அளிக்கவில்லை. 

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மூன்றாவது டெஸ்ட் போட்டியை தவிர மற்ற எந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. வழக்கமாக பேட்டிங் அல்லது பவுலிங் என இரண்டில் ஏதாவது ஒன்றில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் பாண்டியா, இந்த தொடரில் ஏமாற்றிவிட்டார். அணிக்கு வந்த புதிதில் கபில் தேவுடன் ஒப்பிடப்பட்ட பாண்டியா, தற்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். 

நான்காவது டெஸ்ட் போட்டியில் 245 ரன்களை விரட்டிய இந்திய அணி, 22 ரன்களுக்கே முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு கோலி-ரஹானே ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 101 ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் ஸ்கோர் 123ஆக இருந்தபோது கோலி அவுட்டானார். கோலி அவுட்டாகி அடுத்த 60 ரன்களில் ஆட்டமே முடிந்துவிட்டது. இங்கிலாந்து அணி வென்றுவிட்டது. 

இந்த தோல்விக்கு பிறகு, கருத்து தெரிவித்த கவாஸ்கர், பாண்டியாவை கடுமையாக தாக்கியிருந்தார். பாண்டியா குறித்த கேள்விக்கு பதிலளித்திருந்த கவாஸ்கர், நீங்கள் ஹர்திக் பாண்டியாவை ஆல் ரவுண்டர் என அழைக்க விரும்புகிறீர்களா? யார் யாரெல்லாம் பாண்டியாவை ஆல் ரவுண்டர் என அழைக்க விரும்புகிறீர்களோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் நான் அவரை ஆல்ரவுண்டராக நினைக்கவில்லை என கடுமையாக சாடியிருந்தார். 

இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார். பாண்டியா குறித்த விமர்சனம் குறித்து விளக்கமளித்த கவாஸ்கர், நான் பாண்டியாவை மட்டும் விமர்சிக்கவில்லை. இந்திய அணியில் ஆடுவதற்கே தகுதியில்லாத சில வீரர்கள் தற்போதைய அணியில் உள்ளனர். ஒரு மூன்று வீரர்கள் அப்படி உள்ளனர். அவரக்ளை அணியிலிருந்து நீக்க வேண்டும். அணியிலிருந்து என்றால் ஆடும் லெவனில் அல்ல; பென்ச்சில் கூட உட்கார வைக்கக்கூடாது. மொத்தமாக அணியிலிருந்தே நீக்க வேண்டும். அவர்கள் மீண்டும் கடின உழைப்பின் மூலம் அணியில் இடம்பெற போராட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அந்த வீரர்கள் யார் யார் என்று கவாஸ்கர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. 

click me!