இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைக்குமா..? இப்படி சொதப்பிட்டீங்களே.. கவாஸ்கர் காட்டம்

By karthikeyan VFirst Published Feb 1, 2019, 3:33 PM IST
Highlights

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சார்ந்திருப்பது தவறல்ல; ஆனால் அவர்களை மட்டுமே சார்ந்திருப்பது அணிக்கு நல்லதல்ல. 

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வலுவாக உள்ளது. ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகிய மூவரும் உச்சகட்ட ஃபார்மில் உள்ளனர். 

இந்திய அணி பேட்டிங்கை பொறுத்தவரை, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையே பெருமளவில் சார்ந்துள்ளது. ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரில் ஒருவர் கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸ் ஆடி இந்திய அணியை காப்பாற்றிவிடுகின்றனர். இவர்கள் மூவருமே ஏமாற்றும் பட்சத்தில் இந்திய அணியின் நிலை பரிதாபமாகிவிடுகிறது. 

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சார்ந்திருப்பது தவறல்ல; ஆனால் அவர்களை மட்டுமே சார்ந்திருப்பது அணிக்கு நல்லதல்ல. ரோஹித், தவான், கோலி ஆகிய மூவருமே சொதப்பும் பட்சத்தில் இந்திய அணி அதளபாதாளத்திற்கு சென்றுவிடுகிறது. படுமோசமான ஸ்கோருடன் தோல்வியையும் எட்ட நேரிடுகிறது. இதை கடந்த காலத்தில் பலமுறை பார்க்க முடிந்திருக்கிறது. 

டாப் ஆர்டர்கள் சொதப்பும்பட்சத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக பொறுப்புடன் நிதானமாக ஆடி அணியை மீட்டெடுக்க வேண்டும். அப்படியான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய மிடில் ஆர்டர்கள் நம்பிக்கையளிக்கவில்லை. 

இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு சரியான வீரர்கள் இல்லாமல் இருந்த நிலையில், நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அவ்வப்போது சோபித்தாலும் அவ்வப்போது சொதப்பிவிடுகின்றனர். 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மன் கில் இந்திய அணியில் அறிமுகமானார். அந்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் ரோஹித்தும் தவானும் விரைவில் ஆட்டமிழந்துவிட்டனர். பெரும்பாலான போட்டிகளில் ரோஹித், தவான், கோலி ஆகிய மூவருமே பெரும்பாலான ஓவர்களை ஆடிவிடுவர். அதனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு போதுமான ஓவர்கள் கிடைப்பதில்லை. ஏதாவது ஒருசில போட்டிகளில் இவர்கள் சொதப்பும் போட்டிகளில்தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நன்றாக ஆடுவதற்கான வாய்ப்பே கிடைக்கிறது. அப்படியான ஒரு போட்டியாக நேற்றைய போட்டி அமைந்தது. 

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அறிமுக வீரர் கில், ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் சிறப்பாக ஆடி தங்களது திறமையை நிரூபித்திருக்கலாம். ஆனால் அதை அவர்கள் தவறவிட்டனர். கில்லாவது அறிமுக வீரர். ஆனால் கேதர், ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு அது சிறந்த வாய்ப்பாக அமைந்தது. ஆனால் பெரிய இன்னிங்ஸ் ஆட கிடைத்த அந்த வாய்ப்பை நழுவவிட்டனர். ஓரளவிற்கு கூட ஆடவில்லை என்பது கூடுதல் வருத்தம்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், கேதர் ஜாதவ், கில், ராயுடு ஆகியோருக்கு நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டி ஓர் அரிய வாய்ப்பு. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டான போட்டியில் மிடில் ஆர்டர்கள் சிறப்பாக ஆடி இன்னிங்ஸை பில்ட் செய்து நல்ல ஸ்கோரை எட்ட வேண்டும். தனிப்பட்ட முறையில் அவர்களும் நல்ல ஸ்கோரை அடித்து அணியையும் பெரிய ஸ்கோரை எட்ட வைக்க அது ஓர் அரிய வாய்ப்பு. ஆனால் 10 - 15 ஓவர்களில் மிடில் ஆர்டர்கள் களத்திற்கு வந்துவிட்டால், அது அவர்களது திறமையை நிரூபிக்க ஓர் அரிய வாய்ப்பு. ஆனால் அப்படியான வாய்ப்பை தவறவிட்டுவிட்டனர் என்று  கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!