கோலியிடம் இருக்கும் அந்தவொரு கேரக்டர் அவர எங்கேயோ கொண்டு போகப்போகுது.. கோலிதான் இந்தியாவின் சிறந்த கேப்டன்!! கவாஸ்கர் புகழாரம்

By karthikeyan VFirst Published Jan 7, 2019, 2:54 PM IST
Highlights

விராட் கோலியின் கேப்டன்சியில் குறை இருந்தபோது விமர்சித்தவர்களில் முக்கியமானவரான கவாஸ்கர், தற்போது அவரது கற்றுக்கொள்ளும் திறனையும் பண்பையும் பாராட்டி பேசியுள்ளார்.
 

விராட் கோலியின் கேப்டன்சியில் குறை இருந்தபோது விமர்சித்தவர்களில் முக்கியமானவரான கவாஸ்கர், தற்போது அவரது கற்றுக்கொள்ளும் திறனையும் பண்பையும் பாராட்டி பேசியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி கடந்த 2014ம் ஆண்டு விலகினார். அதன்பிறகு அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார் கோலி. கள வியூகம், பவுலர்களை பயன்படுத்தும் முறை, வீரர்களை கையாள்வது, அணி தேர்வு என கோலியின் கேப்டன்சி மீது அதிகமான விமர்சனங்கள் இருக்கின்றன. 

ஆனால் இவற்றில் எல்லாமே கோலி கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டுவருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தும் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடரை இழந்தது. அதனால் கேப்டன் கோலி மற்றும் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கோலியின் கேப்டன்சியில் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும், வெற்றிகளின் எண்ணிக்கை கோலியே சிறந்த கேப்டன் என்கிறது. அந்தளவிற்கு அவரது தலைமையில் இந்திய அணி வெற்றிகளை குவித்துள்ளது. 

தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில்  இந்திய அணியின் தோல்விகளுக்கு கோலியின் கேப்டன்சியில் உள்ள குறைபாடுகளும் முக்கிய காரணமாக அமைந்தன. அதை அப்போதே சுட்டிக்காட்டியுள்ளார் கவாஸ்கர். கோலி 2014ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கிறார். ஆனால் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என இங்கிலாந்து தொடரின் போது கடுமையாக விமர்சித்தார் கவாஸ்கர். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கோலியின் கேப்டன்சியும் பக்குவமும் மேம்பட்டிருப்பதை கண்ட கவாஸ்கர், கோலியை பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய கவாஸ்கர், கோலி தவறுகளிலிருந்து விரைவாக பாடம் கற்றுக்கொள்கிறார். அவரது கற்றல் திறன் அபாரம். இதேபோல தொடர்ந்து கோலி கற்றுக்கொண்டேயிருப்பாராயின், வெற்றிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் சிறந்த கேப்டனாக கோலி திகழ்வார். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் கோலியின் சில முடிவுகள் தவறாக இருந்தன. ஆனால் தென்னாப்பிரிக்காவிலும் இங்கிலாந்திலும் செய்த அளவிற்கான தவறுகளை கோலி இங்கு செய்யவில்லை. ஆஸ்திரேலியாவில் அவர் முன்னின்று அணியை வழிநடத்தி சென்றார் என்று கோலியை கவாஸ்கர் பாராட்டியுள்ளார். 

click me!