இதுல மட்டும் எந்த சந்தேகமும் இல்ல!! கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 6, 2018, 1:19 PM IST
Highlights

இந்திய அணியின் கேப்டனும் உலகின் தலைசிறந்த வீரருமான விராட் கோலியை முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
 

இந்திய அணியின் கேப்டனும் உலகின் தலைசிறந்த வீரருமான விராட் கோலியை முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

உலகின் தலைசிறந்த வீரராக வலம்வந்து கொண்டிருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். கிரிக்கெட்டில் பேட்டிங்கில் படைப்பட்டிருக்கும் பல சாதனைகளை முறியடித்து கொண்டே இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை எல்லாம் கூட விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவதற்குள் முறியடித்துவிடுவார் என எதிர்பாக்கப்படுகிறது. 

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும் அதற்கேற்றவாறு ஆடுவதில் வல்லவரான கோலி, நேரத்திற்கு ஏற்றவாறு ஆடி உலகின் தலைசிறந்த வீரராக தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ளார். கோலியின் கேப்டன்சியின் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவரது பேட்டிங்கை யாராலும் குறைகூற முடியாது. 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் திணறிய நிலையில், அதிகபட்ச ஸ்கோருடன் அந்த தொடரை முடித்துவந்தார். ஆசிய கோப்பையில் ஓய்வில் இருந்த கோலி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் விளாசினார். அறிமுக போட்டியில் ஆடிய பிரித்வி ஷா சதம் விளாசினார். அதேபோல சர்வதேச கிரிக்கெட்டில் ஜடேஜாவும் தனது முதல் இன்னிங்ஸை பதிவு செய்தார். ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 92 ரன்களை அடித்தார். இவர்களின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் போல இல்லை. 

பிரித்வி, ரிஷப் போன்ற இளம் வீரர்கள் எல்லாம் அதிரடியாக ஆட் ரன்களை குவித்த நிலையிலும், தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்ளாமல் மிகவும் பொறுப்பாகவும் பொறுமையாகவும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இளம் வீரர்கள் அதிரடியாக ஆடுவதால், அது தன்னை பாதிக்காமல் பார்த்துக்கொண்ட விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டின் தன்மையை உணர்ந்துகொண்டு மிகவும் நிதானமாக தனது இயல்பான ஆட்டத்தை ஆடி சதமடித்தார். 139 ரன்களை குவித்து கோலி அவுட்டானார். 

இந்நிலையில் கோலி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், சமகால கிரிக்கெட்டில் அனைத்து விதமான போட்டிகளிலும் தலைசிறந்த வீரர் விராட் கோலி தான். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் கோலி. அவர் ஆடும் விதம், ஆட்டத்திறனை விவரிக்கவே முடியாது. மிக அதிகமான வெயிலாக இருந்தால் கூட, அவருக்காக மட்டுமல்லாமல் எதிர்முனையில் ஆடும் வீரருக்காகவும் அதிகமான சிங்கிள்களை எடுத்து ஓடினார் என்று கவாஸ்கர் கோலியை பாராட்டியுள்ளார்.
 

click me!