தவானை ஓரங்கட்டிவிட்டு ரோஹித்துடன் அவர ஓபனிங்ல இறக்குங்க.. எதிரணிகள்லாம் மிரண்டுருவாங்க!! கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Feb 15, 2019, 11:20 AM IST
Highlights

ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட உள்ளது. எனவே மாற்று தொடக்க வீரராக ரஹானே அல்லது கேஎல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவரில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாற்று தொடக்க வீரர் குறித்த அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார் கவாஸ்கர். 

இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - ஷிகர் தவான் திகழ்கின்றனர். ரோஹித் - தவான் ஜோடி சர்வதேச அளவில் மிகச்சிறந்த தொடக்க ஜோடியாக திகழ்கிறது. இந்திய அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்து வருகின்றனர். தொடக்க ஜோடியாக இதற்கு முந்தைய பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகின்றனர். 

ரோஹித் - தவான் ஜோடி நிரந்தர தொடக்க ஜோடியாக திகழ்ந்தாலும் மாற்று தொடக்க வீரராக கேஎல் ராகுல் அணியில் இருந்தார். ஆனால் ராகுல் ஒருநாள் போட்டிகளில் அதிகம் களமிறக்கப்படுவதில்லை. டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர தொடக்க வீரராக களமிறங்கி வந்த ராகுல், கடந்த ஆண்டில் இங்கிலந்து சுற்றுப்பயணம், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் படுமோசமாக சொதப்பியதை அடுத்து, ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். 

டெஸ்ட் போட்டிகளில் ஆடினாலும் ஒருநாள் போட்டிகளிலும் ரோஹித்தும் தவானும் நிரந்தர தொடக்க வீரர்கள் என்பதால் ராகுலுக்கு ஒருநாள் போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைப்பதில்லை. எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்தி கொள்வதில்லை. இங்கிலாந்து தொடரில் தனது இடத்தை ராகுலுக்கு வழங்கி மூன்றாவது வரிசையில் இறக்கிவிட்டார் கோலி. ஆனால் ராகுல் ஏமாற்றிவிட்டார். காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு இந்தியா ஏ அணியில் ஆடிய ராகுல், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார். 

உலக கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய தொடர் மட்டும் உள்ளது. உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இதுதான். எனவே உலக கோப்பை அணிக்கான பரிசீலனையில் உள்ள வீரர்களை சோதனை செய்ய இதுதான் கடைசி வாய்ப்பு.

ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட உள்ளது. எனவே மாற்று தொடக்க வீரராக ரஹானே அல்லது கேஎல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவரில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷேன் வார்னே, இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்டை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

ஷேன் வார்னேவின் கருத்தை முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கரும் ஆதரித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், ரிஷப் பண்ட்டை தொடக்க வீரராக களமிறக்கினால், தொடக்க வீரருக்கான மூன்றாவது ஆப்சன் கிடைத்துவிடும். ரிஷப் பண்ட் சிறந்த வீரர். ரோஹித் சர்மாவுடன் ரிஷப் பண்ட்டை சில சமயங்களில் ஓபனிங் இறக்கலாம். ஷிகர் தவான் சிறந்த வீரர். அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுக்கக்கூடியவர் தான் என்றாலும் ரோஹித்துடன் ரிஷப்பை ஓபனிங் இறக்குவதும் சிறந்த திட்டமாக இருக்கும். ரோஹித்துடன் ரிஷப்பை தொடக்க வீரராக இறக்குவது எதிரணிக்கு திடீர் அதிர்ச்சியை கொடுக்கும். அதனால் அதையும் முயற்சி செய்யலாம் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!