இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்!! நமக்கு டிராவிட்.. அங்கே யாரு தெரியுமா..?

By karthikeyan VFirst Published Feb 14, 2019, 3:51 PM IST
Highlights

இந்தியாவை போலவே மிகச்சிறந்த வீரர் ஒருவரை அண்டர் 19 அணிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமிக்க உள்ளது. 
 

இந்தியாவை போலவே மிகச்சிறந்த வீரர் ஒருவரை அண்டர் 19 அணிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமிக்க உள்ளது. 

இந்திய அணி தற்போது மிகச்சிறந்த அணியாக விளங்குகிறது. எதிர்காலத்தில் இந்திய அணிக்காக ஆட தரமான வீரர்கள் இப்போதே வரிசைகட்டி நிற்கின்றனர். இந்திய கிரிக்கெட்டின் தரம் உயர்ந்ததற்கு ராகுல் டிராவிட்டும் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. 

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக அவர் அளப்பரிய பணியாற்றி கொண்டிருக்கிறார். அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக இருக்கும் டிராவிட், பல இளம் திறமைகளை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்து கொண்டிருக்கிறார். 

பிரித்வி ஷா, ஷுப்மன் கில், பிரியங்க் பஞ்சால், நாகர்கோடி உள்ளிட்ட பல திறமைகளை உருவாக்கி கொடுத்துள்ளதோடு, ராகுல், விஜய் சங்கர், மயன்க் அகர்வால் உள்ளிட்ட பல வீரர்களை மெருகேற்றி இந்திய அணிக்கு அளித்துள்ளார். 

இளம் வீரர்களை உருவாக்கும் பணியை அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளுக்காக ராகுல் டிராவிட் அபாரமாக செய்துகொண்டிருக்கிறார். இந்திய அணி எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்பது இப்போதே தெரிகிறது. அதற்கு ராகுல் டிராவிட் தான் முக்கிய காரணம்.

அதேபோலவே பாகிஸ்தான் அணியும் மிகச்சிறந்த வீரர்களை வளர்த்தெடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக அண்டர் 19 அணிக்கு சிறந்த முன்னாள் வீரர் ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க திட்டமிட்டுள்ளது. அந்த வீரர் பெரும்பாலும் யூனிஸ் கானாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

2000ம் ஆண்டு பாகிஸ்தான் அணியில் அறிமுகமான யூனிஸ் கான், 118 டெஸ்ட் போட்டிகளிலும் 265 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். பாகிஸ்தான் அணிக்காக மிகச்சிறந்த பங்காற்றிய அனுபவம் கொண்டவர் யூனிஸ் கான். எனவே அவர் பாகிஸ்தான் அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!