இளங்கன்று பயமறியாதுனு சொல்வாங்க!! அதையேதான் கங்குலியும் சொல்றாரு.. தாதாவின் குரல் எடுபடுமா..?

By karthikeyan VFirst Published Sep 7, 2018, 11:59 AM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிராக இன்று தொடங்க இருக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்விற்கு கங்குலி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிராக இன்று தொடங்க இருக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்விற்கு கங்குலி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்து வென்றது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. 

இந்த தொடரில் விராட் கோலி, ரஹானே, புஜாரா ஆகியோரை தவிர மற்ற எந்த இந்திய பேட்ஸ்மேனும் சரியாக ஆடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல், சரியாக ஆடவில்லை. 4 போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே வெறும் 113 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதேபோல் ஹர்திக் பாண்டியாவும் மூன்றாவது போட்டியை தவிர மற்ற போட்டிகளில் சொல்லுமளவிற்கு ஆடவில்லை. 

தினேஷ் கார்த்திற்கு பதிலாக அணியில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர் ரிஷப் பண்ட்டும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இதையடுத்து இன்று தொடங்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக மீண்டும் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. பாண்டியாவிற்கு பதிலாக ஹனுமா விஹாரியும் அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜாவும் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ராகுல் மீண்டும் இந்த போட்டியில் வாய்ப்பு பெறுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கங்குலி, டாப் ஆர்டரில் பிரித்வி ஷாவை சேர்ப்பது அணிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இளம் வீரரான அவர், எந்தவித பதற்றமோ பயமோ இல்லாமல் ஆடுவார். அது அவருக்கு மட்டுமல்லாமல் அணிக்கே உத்வேகமாக அமையும். ராகுலும் தவானும் ஃபார்மில்லாமல் இருக்கின்றனர். எனவே ராகுலுக்கு பதிலாக பிரித்வியை சேர்க்கலாம் எனவும் அதேபோல ஹனுமா விஹாரிக்கும் அணியில் ஆட வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் கங்குலி தெரிவித்துள்ளார்.
 

click me!