இவ்வளவு கேவலமா ஆயிடுச்சே ஆஸ்திரேலியாவின் நிலை!! செம கலாய் கலாய்த்த கங்குலி.. ஸ்டீவ் வாக் மீது தணியாத தாதாவின் கோபம்

By karthikeyan VFirst Published Dec 31, 2018, 5:34 PM IST
Highlights

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. இவர்களின் தடைக்கு பிறகு டிம் பெய்ன் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு செயல்பட்டுவருகிறார். 
 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. இவர்களின் தடைக்கு பிறகு டிம் பெய்ன் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு செயல்பட்டுவருகிறார். 

ஸ்மித்தும் வார்னரும் இல்லாமல் அந்த அணி திணறிவருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணி, இம்முறை தொடரை வென்று வரலாறு படைக்கும் முனைப்பில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றது. 

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, பெர்த் டெஸ்டில் 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பின்னர் மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்டில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில், சிட்னியில் நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்வதில் அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், ஆடும் லெவனை தேர்வு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், தொடர்ந்து சொதப்பிவரும் ஃபின்ச்சை நீக்கிவிட்டு லாபஸ்சாக்னேவை அணியில் சேர்க்குமாறும் உஸ்மான் கவாஜாவை மார்கஸ் ஹாரிஸுடன் ஓபனிங் இறக்க பரிந்துரைத்துள்ளார். 

ஸ்டீவ் வாக் தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலிய அணி:

மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன்(கேப்டன்), லாபஸ்சாக்னே, மிட்செல் மார்ஷ், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட். 

இந்த அணியை தேர்வு செய்து பகிர்ந்துள்ளதோடு, சில பரிந்துரைகளையும் செய்துள்ளார். 

இதைக்கண்ட கங்குலி, ஆஸ்திரேலிய அணியின் தேர்வு முறை இவ்வளவு கீழ்த்தரமாகிவிட்டதே.. முன்னாள் ஜாம்பவான்கள் சமூக வலைதளங்களில் அணியை தேர்வு செய்யும் அளவிற்கு அந்த அணியின் நிலை ஆகிவிட்டது என்று கிண்டலடித்துள்ளார். 

கங்குலி கேப்டனான காலத்திலிருந்தே ஸ்டீவ் வாக்கிற்கும் கங்குலிக்கும் ஆகாது. கங்குலி கேப்டனான புதிதில், சச்சின் டெண்டுல்கர் என்ற சிறந்த வீரர் இருக்கும் அணிக்கு நீ கேப்டனா? என்று கங்குலியை ஏளனப்படுத்தி பேசினார் ஸ்டீவ் வாக். ஆனால் ஸ்டீவ் வாகி இழிசொல்லுக்கு எல்லாம் தனது பேட்டிங்கின் மூலம் தொடரை வெல்வதன் மூலமும் என திறமையின் வாயிலாக பதிலடி கொடுத்தார் கங்குலி. இந்நிலையில், தற்போது ஸ்டீவ் வாக் அணியை அறிவித்ததும், வேக வேகமாக வந்து கிண்டலடித்துள்ளார் கங்குலி.
 

click me!