எதிரணி கேப்டனை கங்குலியை மாதிரி யாராலும் கொடுமைப்படுத்த முடியாது!! தாதாவிடம் சிக்கி சீரழிந்த ஸ்டீவ் வாக்

By karthikeyan VFirst Published Sep 9, 2018, 11:48 AM IST
Highlights

எதிரணி வீரர்களை வம்பு இழுப்பதற்கு பெயர்போன ஆஸ்திரேலிய அணியின் கேப்டனை கங்குலி கொடுமைப்படுத்திய சம்பவம் உங்களுக்கு தெரியுமா? 

எதிரணி வீரர்களை வம்பு இழுப்பதற்கு பெயர்போன ஆஸ்திரேலிய அணியின் கேப்டனை கங்குலி கொடுமைப்படுத்திய சம்பவம் உங்களுக்கு தெரியுமா? அதுகுறித்து பார்ப்போம்..

இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர் கங்குலி. இந்திய அணி சூதாட்ட புகாரால் சின்னா பின்னமாகியிருந்த சமயத்தில் 2000ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்று அணியை வளர்த்தெடுத்தவர் அப்போதைய கேப்டன் கங்குலி. அப்போதைய பயிற்சியாளர் ஜான் ரைட்டுடன் இணைந்து இளம் வீரர்களை ஊக்குவித்து அணியை வளர்த்தெடுத்தார் கங்குலி.

அந்த சமயத்தில் கோமாளி போன்று பார்க்கப்பட்ட இந்திய அணியை, மிரட்டலான அணியாக மாற்றியவர் கங்குலிதான். அதிலும் இந்திய அணியின் மீதான ஆஸ்திரேலிய அணியின் பார்வை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவே தேவையில்லை. அப்படியான நிலையில், இந்திய அணியை ஆக்ரோஷமான அணியாக மாற்றி, உலக அரங்கில் தலைநிமிர வைத்தவர் கங்குலி தான். 

எல்லா காலக்கட்டத்திலும் திமிருடன் வலம்வருவது ஆஸ்திரேலிய அணிதான். பொதுவாக அந்த அணியினர் எதிரணி வீரர்களை வம்புக்கு இழுப்பதிலும் சீண்டுவதிலும் வல்லவர்கள். வம்புக்கு இழுப்பதில் மட்டுமல்லாது ஸ்டீவ் வாக் தலைமையிலான அணி, பாண்டிங் தலைமையிலான அணி என அந்த அணி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவந்தது. மெக்ராத்தெல்லாம் வம்பு இழுப்பதில் வல்லவர். 

இப்படி, எதிரணி வீரர்களை வம்பு இழுத்தும் சீண்டியும் வந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டனையே நமது கங்குலி வித்தியாசமான முறையில் கொடுமைப்படுத்தியுள்ளார். 2001ம் ஆண்டு நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் போது, டாஸ் போடுவதற்கு தாமதமாகவே வந்துள்ளார் கங்குலி. இது அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக்கை எரிச்சலடைய செய்துள்ளது. 

ஆனால், ஒருமுறை மட்டுமே டாஸ் போடுவதற்கு தாமதமாக வந்ததாக கங்குலி தெரிவித்தார். ஸ்டீவ் வாக்கோ அதை மறுத்தார். ஒவ்வொரு முறையுமே தாமதமாகத்தான் கங்குலி வந்ததாக தெரிவித்தார். எந்தெந்த விதத்திலாமோ எதிரணியை வம்புக்கு இழுக்கலாம். ஆனால் எதிரணி கேப்டனை கங்குலி மாதிரி யாரும் சோதித்திருக்க மாட்டார்கள். இந்திய அணியின் அப்போதைய நிலையில், இதுவும் ஒருவகையில் மறைமுகமான முறையில் டென்ஷனாக்கும் உத்தியாக இருந்திருக்கலாம். அதுமட்டுமல்லாமல் சூதாட்ட புகாரால் சின்னா பின்னமாகியிருந்த இந்திய அணியின் மீதான ஆஸ்திரேலிய அணியின் மதிப்பீடும் பார்வையும் மோசமாக இருந்திருக்கும். அதனால் கெத்து காட்டுவதற்காக கூட கங்குலி அப்படி செய்திருப்பார். என்னதான் இருந்தாலும் ஸ்டீவ் வாக்கை இதைவிட மோசமாக யாரும் சோதித்திருக்க மாட்டார்கள்.
 

click me!