இந்திய அணிக்கு இதவிடவா வேற அசிங்கம் வேணும்..?

By karthikeyan VFirst Published Sep 9, 2018, 10:02 AM IST
Highlights

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. 
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 332 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. ஹனுமா விஹாரியும் ரவீந்திர ஜடேஜாவும் களத்தில் உள்ளனர். 

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணி எடுத்த ஸ்கோரைவிட சுமார் 80 ரன்கள் குறைவாகவே சுருட்டியிருக்க முடியும். ஆனால் இதற்கு முந்தைய போட்டிகளில் செய்த அதே தவறை செய்த இந்திய அணி, இங்கிலாந்து அணியில் கீழ்வரிசை வீரர்களை நீண்டநேரம் களத்தில் நிலைத்து நின்று ஆடவிட்டுவிட்டனர். 

ஆரம்பத்தில் குக் - மொயின் அலி ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தது. முதல் விக்கெட்டுக்கு 60 ரன்களும் இரண்டாவது விக்கெட்டுக்கு 73 சேர்த்தது இங்கிலாந்து அணி. அதன்பிறகு ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், மொயின் அலி, அடில் ரஷீத் ஆகிய 6 விக்கெட்டுகளும் 214 ரன்களுக்கு உள்ளாக சாய்க்கப்பட்டன. 

9வது விக்கெட்டுக்கு பட்லருடன் ஜோடி சேர்ந்த ஸ்டூவர்ட் பிராட், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. ஏற்கனவே கோலியின் கேப்டன்சி மீது களவியூகம், பவுலர்களை பயன்படுத்தும் விதம் குறித்த விமர்சனங்கள் இருந்துவரும் நிலையில், மீண்டும் அந்த விமர்சனங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்தது நேற்றைய சம்பவம். 

9வது விக்கெட்டுக்கு பட்லர்-பிராட் ஜோடி 98 ரன்களை குவித்தது. இந்த இன்னிங்ஸில் அந்த அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர் இதுதான். அதுவும் 9வது விக்கெட்டுக்கு.. பட்லரும் பிராடும் தப்பித்தவறியோ தட்டுத்தடுமாறியோ இந்த ஸ்கோரை குவிக்கவில்லை. மிகவும் தெளிவாக களத்தில் இந்திய பவுலர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி இந்த ஸ்கோரை குவித்தனர். 

இதன்மூலம் பட்லர் - பிராட் ஜோடி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் 9வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்னதாக 2002ம் ஆண்டு வொயிட்-ஹாக்கார்டு ஜோடி 9வது விக்கெட்டுக்கு 103 ரன்களை குவித்தது தான் அதிகபட்சம். அதற்கு அடுத்த இடத்தில் பட்லர்-பிராடு ஜோடி குவித்த 98 ரன்கள் தான் அதிகம் ஆகும். 
 

click me!