
FIH ஆக்கி ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரையில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்துகின்றன. இந்த ஆக்கி தொடரில் இந்தியா, சிலி, ஓமன், சுவிட்சர்லாந்து, கனடா, ஜெர்மனி, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா, அர்ஜென்டினா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரியா, இங்கிலாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா வங்கதேசம், பிரான்ஸ், கொரியா, பெல்ஜியம், எகிப்து, ஸ்பெயின் மற்றும் நமீபியா ஆகிய 24 மணிகள் கலந்து கொள்கின்றன.
சென்னை மற்றும் மதுரையில் மொத்தம் 72 போட்டிகள் நடைபெற உள்ளன. ஏ பிரிவில் ஜெர்மனி,தென்னாப்பிரிக்கா, கனடா, அயர்லாந்து ஆகிய அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், சிலி, சுவிட்சர்லாந்து, சி பிரிவில் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா, டி பிரிவில் ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா, இ பிரிவில் நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா, எப் பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா, வங்கதேசம் அணிகள் உள்ளன.
சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி மைதானம் மற்றும் மதுரையில் ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஆக்கி மைதானத்தில் ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பை போட்டிகளை பொதுமக்கள் எந்தவித கட்டணமுமின்றி இலவசமாக பார்க்கலாம் என்று இந்தியா ஆக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
டிக்கெட் எப்படி பெறுவது?
ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பைக்கான இலவச டிக்கெட்டுகளை www.ticketgenie.in என்ற இணையதளம் அல்லது Hockey India மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு நபர் 4 டிக்கெட்டுகளை மட்டுமே பெற முடியும். ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பை போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் நேரடியாக பார்த்து ரசிக்கலாம்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.