
அகில இந்திய கால்பந்து சம்மேளன (ஏஐஎப்எப்) தலைவராக பிரஃபுல் பட்டேல் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் தலைவர் பதவியைப் பிடித்துள்ளார்.
அகில இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நீக்கியது.
இதனையடுத்து தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற அகில இந்திய கால்பந்து சம்மேளன பொதுக்குழு கூட்டத்தின்போது ஓய்வு பெற்ற நீதிபதி பிபின் சந்திரகாந்த் பால் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த புதிய நிர்வாகிகள் 2017 முதல் 2020 வரை பொறுப்பில் இருப்பார்கள்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.