
இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நடாலை வீழ்த்தி ஃபெடரர், காலிறுதிக்கு முன்னேறினார்.
உலகின் 2-ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 4-ஆவது சுற்றில் ஃபெடரர் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய ஓபனின் இறுதிச்சுற்றில் நடாலை வீழ்த்திய ஃபெடரர், இப்போது மீண்டும் அவரை வீழ்த்தி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளார். இதுவரை நடாலுடன் 36 ஆட்டங்களில் மோதியுள்ள ஃபெடரர் 13-இல் மட்டுமே வென்றுள்ளார். எனினும் கடைசியாக மோதிய 3 ஆட்டங்களிலும் ஃபெடரரே வெற்றி வாகை சூடினார்.
ஃபெடரர் தனது காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை சந்திக்கிறார்.
கிர்ஜியோஸ் தனது 4-ஆவது சுற்றில் 6-4, 7-6 (3) என்ற நேர் செட்களில் நோவக் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார். கடந்த இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக ஜோகோவிச்சை வீழ்த்தியிருக்கிறார் கிர்ஜியோஸ்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.