
இலங்கை தலைநகர் கொழும்பில் புதன்கிழமை தொடங்கிய வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வங்கதேச அணிக்கு 100-ஆவது டெஸ்ட் போட்டியாகும்.
போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி அசத்தலாக ஆடி தனது முதல் இன்னிங்ஸில் 83.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 238 ஒட்டங்கள் எடுத்துள்ளது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணியில் முன்னணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினார். எனினும் தினேஷ் சன்டிமல் சிறப்பாக ஆட, இலங்கை அணி மோசமான நிலையில் இருந்து மீண்டது.
இலங்கை அணி 83.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 238 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
சன்டிமல் 86, ஹெராத் 18 ஓட்டங்களுடன் களத்தில் நிற்கின்றனர்.
வங்கதேசம் தரப்பில் முஸ்தாபிஜுர் ரஹ்மான், மெஹதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.