அறிவிக்கப்பட்டது இங்கிலாந்து அணி…

First Published Dec 7, 2016, 12:14 PM IST
Highlights


இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, அதைத் தொடர்ந்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் மோத உள்ளது.
வரும் ஜனவரி 15-ஆம் தேதி புணேவில் தொடங்கும் அந்தப் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது, இங்கிலாந்து அணியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் இயான் மோர்கன், பேட்ஸ்மேன்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட் ஆகியோர் தற்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது நடைபெறும் டெஸ்ட் தொடருக்குப் பிறகு, பென் டக்கெட், ஸ்டீவன் ஃபின், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோருக்கு ஒருநாள் போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஓய்வளிக்கப்படுகிறது.
ஒருநாள் போட்டிக்கான அணி விபரம்: இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோனதன் பேர்ஸ்டோ, ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் டாசன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், ஆதில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ்.
டி20 அணி விபரம்: ஒருநாள் போட்டி அணியில் இடம்பிடித்த அனேக வீரர்கள் இந்த அணியிலும் உள்ளனர். இருப்பினும், கிறிஸ் வோக்ஸூக்குப் பதிலாக இந்த அணியில் கிறிஸ் ஜோர்டன், டைமல் மில்ஸ் ஆகியோர் சேர்க்கப்படுகின்றனர்.

tags
click me!