வெற்றியின் விளிம்பில் இந்தியா!! இன்னும் கொஞ்ச நேரத்துல மொத்தமும் முடிஞ்சுடும்

By karthikeyan VFirst Published Aug 21, 2018, 5:20 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய அணி உள்ளது. 
 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய அணி உள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தது. அதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என இங்கிலாந்து முன்னிலை வகித்தது. இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் அணியில் மூன்று அதிரடி மாற்றங்களோடு இந்திய அணி களமிறங்கியது. 

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 168 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 352 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 

மூன்றாம் நாள்(நேற்று) ஆட்டத்தில் 9 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை நேற்று தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகிய இருவரும் 9 ஓவர்களையும் நிதானமாக ஆடி, விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நேற்றைய ஆட்டத்தை முடித்தனர். 

9 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்தனர். நான்காம் நாள் ஆட்டம், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. இன்றைய ஆட்டம் தொடங்கியதுமே முதல் ஓவரிலேயே ஜென்னிங்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. அதற்கு அடுத்து இஷாந்த் சர்மாவின் இரண்டாவது ஓவரில் குக்கும் அவுட்டானார். 

ஆட்டம் தொடங்கி, மூன்று ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி. அதன்பிறகு ஜோ ரூட்டும் போப்பும் ஜோடி சேர்ந்து ஆடிவந்தனர். ரூட்டை 13 ரன்களுக்கு பும்ராவும் போப்பை 16 ரன்களுக்கு ஷமியும் வீழ்த்தினர். இதையடுத்து 62 ரன்களுக்கே அந்த அணி 4 விக்கெட்டை இழந்தது. 

4 விக்கெட்டுகளை விரைவில் இழந்த நிலையில், பட்லரும் ஸ்டோக்ஸும் ஆடிவருகின்றனர். ஏற்கனவே பேர்ஸ்டோவுக்கு விக்கெட் கீப்பிங் செய்யும்போது கைவிரலில் அடிபட்டுள்ளதால் அவரும் ஆட முடியாத சூழல் உள்ளது. எனவே எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் இந்திய அணி விரைவில் வீழ்த்திவிடும். வெற்றியின் விளிம்பில் உள்ளது இந்திய அணி. 
 

click me!