
பிரெஞ்ச் ஓபன் போட்டியில் நிகழாண்டு பரிசுத் தொகை ரூ.45.73 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
டென்னிஸ் விளையாட்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் உள்ளிட்ட 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் முக்கியமானவை.
இதில் ஆஸ்திரேலிய ஓபன் முதலில் தொடங்குகிறது. யுஎஸ் ஓபனோடு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நிறைவு பெறுகின்றன. இதில் விம்பிள்டன் போட்டியே மிகவும் பழைமையானது.
ஆண்டுதோறும் ஓபன் போட்டிகளை நடத்தும் அமைப்பாளர்கள் பரிசுத் தொகைகளை குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தி வருகின்றனர். பிரெஞ்ச் ஓபன் போட்டியில் நிகழாண்டு பரிசுத் தொகை ரூ.45.73 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் போட்டிகளின் பரிசுத் தொகையை விட கூடுதலாகும்.
முதல் சுற்றில் தோல்வி அடைவோர் 14.3 சதவீதம் உயர்த்தப்பட்ட தொகையை பெறுவர். ஆடவர், மகளிர் ஒற்றையர் போட்டியில் முதலிடம் பெறுவோருக்கு 5 சதவீதம் தொகை உயர்த்தப்படுகிறது.
தற்போது பிரெஞ்ச் ஓபன் போட்டியின் நடுக்கள மைதானம் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு 400 மில்லியன் யுரோ செலவாகியுள்ளது. இது டென்னிஸ் கூட்டமைப்புக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, வரும் ஆண்டுகளில் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட வாய்ப்பில்லை என கூட்டமைப்பு தலைவர் பெர்னார்ட் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.