
ஐபிஎல்லில் வெற்றிகரமாக அணியாக வலம்வரும் சென்னை அணி, சிறந்து விளங்க என்ன காரணம் என்பது குறித்து தோனி மனம் திறந்துள்ளார்.
இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு இந்த சீசனில் ஆடிவரும் சென்னை அணி 7வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் தகுதி சுற்று போட்டியில் ஹைதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்த சீசனின் வலுவான அணிகளில் ஒன்றாக திகழும் ஹைதராபாத் அணி, இந்த சீசனில் சென்னையுடன் ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. 2 லீக் போட்டிகளிலும் சென்னையிடம் தோற்ற ஹைதராபாத், தகுதி சுற்று போட்டியிலும் தோல்வியை தழுவியது.
இந்த போட்டிக்கு பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, சென்னை அணி வலுவான அணியாக திகழ்வதற்கான காரணத்தை கூறினார். அப்போது பேசிய தோனி, வீரர்களின் ஓய்வறை சூழல் தான் போட்டியிலும் எதிரொலிக்கும். எங்கள் அணி ஓய்வறையின் சூழல் சிறப்பாக உள்ளது. அதுதான் களத்திலும் எதிரொலிக்கிறது. ஓய்வறை சூழல்தான் களத்தில் வீரர்கள் ஓரணியாக சிறப்பாக செயல்பட உதவுகிறது. அது சிறப்பாக அமைய அணி நிர்வாகம், ஊழியர்கள், வீரர்கள் என அனைவருமே காரணம். இவற்றில் ஒன்றின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் அனைத்தும் சிதைந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.