தோனியை கவர்ந்த ராகுலின் கொண்டாட்டம்..! வைரலாகும் வீடியோ

First Published Jul 4, 2018, 10:47 AM IST
Highlights
dhoni impressed by rahuls century celebration


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடி சதமடித்த ராகுலின் கொண்டாட்டம், தோனியை கவர்ந்துவிட்டது. ராகுலின் கொண்டாட்டமும் தோனியின் ரியாக்‌ஷனும் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்துவருகின்றன. முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவருக்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் வெற்றியை எளிமையாக வசமாக்கினார் ராகுல். அதிரடியாக ஆடி சதமடித்தார் ராகுல். இது சர்வதேச டி20 போட்டிகளில் ராகுலுக்கு இரண்டாவது சதமாகும். 

ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி, அதன்மூலம் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற ராகுல், வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அணி நிர்வாகம், தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இங்கிலாந்தின் பந்துவீச்சை சிதறடித்த ராகுல், சதமடித்ததும் அந்த மகிழ்ச்சியை வெகுவாக கொண்டாடினார். 

<blockquote class="twitter-tweet" data-lang="en-gb"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/VaZLcO7DzU">pic.twitter.com/VaZLcO7DzU</a></p>&mdash; Utkarsh Bhatla (@UtkarshBhatla) <a href="https://twitter.com/UtkarshBhatla/status/1014262590669774849?ref_src=twsrc%5Etfw">3 July 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

சதமடித்ததும் தனது மகிழ்ச்சியை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தி கொண்டாடினார் ராகுல். இதை ஓய்வறையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த தோனி, ராகுலின் கொண்டாட்டத்தை கண்டு சிரித்தபடியே நகர்ந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

click me!