”தல” வாக்கு தவறாகுமா..? சாஹரிடம் தோனி சொன்னது என்ன..?

First Published Jul 2, 2018, 10:27 AM IST
Highlights
dhoni identified chahar talent and encourage him during ipl


தோனி அளித்த உத்வேகத்திற்கு பிறகுதான் சாஹர், மேலும் சிறப்பாக வீசினார் என சாஹரின் பயிற்சியாளர் நவேந்து தியாகி தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. டி20 போட்டிகள் நாளை தொடங்குகின்றன. 

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அணியின் நம்பிக்கை நட்சத்திர பவுலரான பும்ரா, கை கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார்.

தீபக் சாஹர், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடினார். அப்போதே திறமையாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஐபிஎல்லில் சிறப்பாக வீசியதால் இங்கிலாந்தில் நடந்துவரும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் நடந்துவரும் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் அருமையாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி குவித்துள்ளார். 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை குவித்து அசத்தியுள்ளார் சாஹர். இந்த முத்தரப்பு தொடரின் இறுதி போட்டி இன்று நடக்க உள்ளது. 

இங்கிலாந்தில் அவரது பந்துவீச்சு நன்றாக எடுபட்டுள்ளது. அவரது ரிவர்ஸ் ஸ்விங் இங்கிலாந்து முத்தரப்பு தொடரில் நல்ல முடிவையும் பலனையும் தந்துள்ளது. இந்த தொடரிலும் சிறப்பாக வீசியதால் பும்ராவிற்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது அவருக்கு கிடைத்த அருமையான மற்றும் அரிய வாய்ப்பு. இதற்கு முன் கிடைத்த வாய்ப்புகளை போலவே இதையும் சிறப்பாக பயன்படுத்துவாரா என்பதை பார்ப்போம்.

இதற்கிடையே இந்திய அணியில் தீபக் சாஹர் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பயிற்சியாளர் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தீபக் சாஹர் தொடர்பாக பேசிய அவரது பயிற்சியாளர் நவேந்து தியாகி, இங்கிலாந்து முத்தரப்பு தொடரில் இந்தியா ஏ அணிக்காக சாஹர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து சூழல் தனக்கு சாதகமாக சாஹர் என்னிடம் கூறினார். அதனால் இங்கிலாந்து தொடரிலும் சாதிப்பார். ஐபிஎல் தொடரின் போது சென்னை அணியில் ஆடிய சாஹர் புதிய பந்தில் நன்றாக வீசுவதாகவும் திறமையை சரியான விதத்தில் வெளிப்படுத்துமாறும் சாஹருக்கு தோனி அறிவுறுத்தினார். அதன்பிறகு தான் சாஹர், மேலும் நன்றாக வீசுகிறார் என தியாகி தெரிவித்தார்.

திறமையான வீரர்களை அடையாளம் கண்டு, அவர்கள் திறமையை மேம்படுத்துவதை தோனி எப்போதுமே செய்துவந்திருக்கிறார். அந்த வகையில், சாஹரின் திறமையையும் அடையாளம் கண்டு அவரை உத்வேகப்படுத்தியுள்ளார். தோனியின் கணிப்பு தவறவில்லை. ஐபிஎல் முடிந்த அடுத்த ஒன்றரை மாதத்திலேயே சாஹர் இந்திய அணியில் இடம்பிடித்துவிட்டார். 
 

click me!