ஷேன் வாட்சனுக்கு செல்லப்பெயர் சூட்டி மகிழ்ந்த தோனி!!

First Published May 28, 2018, 5:33 PM IST
Highlights
dhoni gives new name for shane watson


ஐபிஎல் 11வது சீசனின் இறுதி போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடி, ஹைதராபாத்திடமிருந்து வெற்றியை பறித்து சென்னை அணிக்கு மூன்றாவது முறையாக கோப்பையை உறுதி செய்த வாட்சனுக்கு சென்னை அணியின் கேப்டன் தோனி செல்லப்பெயர் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் 11வது சீசனின் இறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற தோனி, முதலில் பவுலிங் தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 178 ரன்களை குவித்தது.

புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், சித்தார்த் கவுல் ஆகிய சிறப்பான பவுலர்களை கொண்ட ஹைதராபாத் அணிக்கு எதிராக 179 ரன்கள் என்பது கடினமான இலக்குதான். அதற்கேற்றாற்போலவே தொடக்க ஓவர்களை புவனேஷ்வர் குமார் அருமையாக வீசினார். பவர்பிளே 6 ஓவர்களில் வெறும் 35 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது சென்னை அணி.

நிதானமாக தொடங்கிய ஷேன் வாட்சன், 7வது ஓவரிலிருந்து அடித்து ஆட தொடங்கினார். வாட்சன் அதிரடியை தொடங்கிய பிறகு சென்னை அணியின் ரன்ரேட் மளமளவென உயர்ந்தது. சந்தீப் சர்மா வீசிய 13வது ஓவரில் 26 ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார் வாட்சன். அதன்பிறகும் அதிரடியை தொடர்ந்த வாட்சன், 51 பந்துகளில் சதமடித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 117 ரன்களை குவித்து சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற செய்தார்.

இந்த போட்டியை ஒரு அணி சார்பு போட்டியாக மாற்றி, ஹைதராபாத் அணிக்கு வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தை கூட கொடுக்காத வகையில், ஆடி வெற்றியை பறித்தார் ஷேன் வாட்சன்.

வாட்சனின் அதிரடியால் மூன்றாவது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சென்னை கேப்டன் தோனி, சென்னை அணிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. மும்பை இன்று மஞ்சள் நிறமாக மாறி ஆதரவளித்ததற்கு நன்றி. ஷேன் “ஷாக்கிங்” வாட்சன் இன்ப அதிர்ச்சி தரக்கூடிய இன்னிங்ஸை ஆடினார். இந்த சீசன் மிக இனிமையாக முடிந்தது என தெரிவித்துள்ளார்.

ஷேன் வாட்சன் அதிர்ச்சியளிக்க கூடிய இன்னிங்ஸை ஆடியதால், அவருக்கு ஷேன் ஷாக்கிங் வாட்சன் என செல்லமாக தோனி சூட்டிய பெயர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

click me!