தோனிக்கு பிறந்தநாள்.. வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய தல!! வித்தியாசமாக வாழ்த்து சொன்ன வீரேந்திர சேவாக்

First Published Jul 7, 2018, 10:58 AM IST
Highlights
dhoni birthday celebration with family and players

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு, வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தார். 2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகிய தோனி, தனது திறமையாலும் முயற்சியாலும் உழைப்பாலும் இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார்.

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான கோப்பைகளையும் வென்று கொடுத்த வெற்றி கேப்டன் தோனி. 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகி தற்போது அணியில் சாதாரண வீரராக ஆடிவருகிறார்.

இந்திய அணியின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார் தோனி. தன் மீதான விமர்சனங்கள் எழும்போதெல்லாம், தனது திறமையின் மூலம் பதிலடி கொடுத்து 14 ஆண்டுகளாக தனக்கான இடத்தை தக்கவைத்து தன்னை அணியின் முக்கியமான வீரராக நிலைநிறுத்தி கொண்டிருக்கிறார்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் தோனி ஆடிவருகிறார். இந்நிலையில், இங்கிலாந்தில் தனது மனைவி, குழந்தை மற்றும் சக வீரர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை தோனி கொண்டாடியுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Birthday Celebrations Video of #Thala 💕🎂🎊. Thanks for the video #ChinnaThala @ImRaina#WhistlePodu #HappyBirthdayMSDhoni pic.twitter.com/ulixHJY6Hi
— MS Dhoni Fans #Dhoni (@msdfansofficial) July 7, 2018

மேலும் தோனி கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். தோனியுடனான புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரெய்னா, மேதை தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களை போல யாருமே இருக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

Happy birthday to the legend @msdhoni. There can be nobody like you. ✌️ pic.twitter.com/gMDepTPN3l
— Suresh Raina (@ImRaina) July 6, 2018

இதேபோல பலரும் வாழ்த்து தெரிவித்தாலும், சேவாக்கின் வாழ்த்து சற்றே வித்தியாசமானது. தோனி ஸ்டம்பிங் ஆகாமல் இருப்பதற்காக ஒருமுறை காலை எட்டி கிரீஸுக்குள் வைத்தபோது, இரு கால்களும் விரிந்த நிலையில் இருக்கும். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள சேவாக், இதைவிட உங்கள் வாழ்வு நீட்டிக்க வேண்டும். உங்கள் ஸ்டம்பிங்கைவிட வேகமாக உங்கள் வாழ்வில் அனைத்து மகிழ்ச்சிகளும் கிடைக்க வேண்டும். ஓம் ஃபினிஷாய நமஹ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

#HappyBirthdayMSDhoni . May your life be longer than this stretch and may you find happiness in everything, faster than your stumpings. Om Finishaya Namaha ! pic.twitter.com/zAHCX33n1y
— Virender Sehwag (@virendersehwag) July 6, 2018

click me!