
பன்னிரெண்டு வயதிற்கு குறைவான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் மத்தியப் பிரதேச அரசின் சட்டத்திற்கு இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வரவேற்பு அளித்துள்ளார்.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியது: "சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் மத்தியப் பிரதேச அரசு கொண்டுவந்த சட்டத்தை வரவேற்கிறேன்.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்று தாய்நாட்டிற்காக வீராங்கனைகள் கௌரம் சேர்த்து வருகின்றனர்.
எனவே, ஆண், பெண் என்று இனி வேறுபடுத்தி பார்க்கக் கூடாது என்று பெற்றோர்கள் உணர்ந்து வருகின்றனர்" என்று சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
கடுமையான சட்டங்களினால் மட்டுமே பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு முடிவு கட்ட முடியும் என்று அனைவரும் நம்பும் வேளையில் இந்திய வீராங்கனை இந்த மாதிரியான சட்டத்திற்கு வரவேற்பு அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.