dc vs rr no ball: நோபாலுக்காக நடுவருடன் ரகளை: பந்த், பயிற்சியாளருக்கு அபராதம்,தடை: தாக்கூரும் தப்பவில்லை

By Pothy RajFirst Published Apr 23, 2022, 12:24 PM IST
Highlights

dc vs rr no ball : மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நோபால் தராத நடுவருக்கு எதிராக ரகளையில் ஈடுபட்ட டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த், பயிற்சியாளர் ஆம்ரேவுக்கு ஐபிஎல் நிர்வாகம் கடும் அபராதம் விதித்துள்ளது.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நோபால் தராத நடுவருக்கு எதிராக ரகளையில் ஈடுபட்ட டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த், பயிற்சியாளர் ஆம்ரேவுக்கு ஐபிஎல் நிர்வாகம் கடும் அபராதம் விதித்துள்ளது.

முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது. 223 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி  20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரோமென் பாவெல், குல்தீப் யாதவ் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியின் மெக்காய் கடைசி ஓவரை வீசினார். 

பரபரப்பான கடைசி ஓவர்

மெக்காய் வீசிய முதல் 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து ரோமன் பாவெல் ஆட்டத்தில்  பரபரப்பு ஏற்படுத்தினார்.  யார் பக்கம் ஆட்டம் திரும்பும் எனத் தெரியாத நிலை இருந்தது. மெக்காய் 3-வது பந்தை ஃபுல்டாஸாக பாவெல் இடுப்பு உயரத்துக்கு வீசினார், அதையும்  ஓவர் மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பாவல் பறக்கவிட்டார். 

 பாவெல் இடுப்புவரை வீசப்பட்டதால் இதற்கு நடுவர் நிதின் மேனனிடம் நோ-பால் கோரினார். ஆனால், கள நடுவர் நிதின் மேனன் நோபால் தரவில்லை. ஆனால் டக்அவுட்டில் அமர்ந்திருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியினர் அனைவரும் நடுவர் நோபால் தராததற்கு அதிருப்தி நோபால் வழங்கக் கோரி சைகை செய்தனர். ஆனால், நடுவர் இடுப்பு மேல் செல்லவில்லை அதனால் நோபால் தரமுடியாது என்றார்.

இதனால் சிலநிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டு, குல்தீப் யாதவ், நடுவரிடம் நோபால் கோரினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த கேப்டன் ரிஷப் பந்த், களத்தில் இருந்த ரோமென் பாவல், குல்தீப் யாதவை விளையாடியது போதும் திரும்பவாருங்கள் என்று சைகையால் பெவிலியனுக்கு அழைத்தார். 

திரும்ப அழைப்பு

நடுவரின் தவறான தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து ஆட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்து வீரர்களை ரிஷப் பந்த் திரும்ப அழைத்தார். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்த மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் ரிஷப் பந்தை சமாதானம் செய்து அமரவைத்தனர். அதுமட்டுமல்லாமல் டெல்லி கேபிடல்ஸ் துணை பயிற்சியாளர் பிரவிண் ஆம்ரே மைதானத்தில் சென்று நடுவரிடம் பேசினார். 

பொதுவாக ஒரு அணியின் பயிற்சியாளர்கள் இதுபோன்று ஆட்டநேரத்தில் மைதானத்தில் சென்று நடுவரிடம் சென்று பேசுவதும், வாக்குவாதம் செய்வதும் முறையற்றது.  அதுமட்டுமல்லாமல், பவுண்டரி எல்லையில் நின்றிருந்த ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர், ரிஷப் பந்திடம் பேச அதுவாக்குவாதத்தில் முடிந்தது. 

ரிஷப் பந்தின் ரகளை, பிரவின் ஆம்ரே மைதானத்துக்குள் சென்று நடுவரிடம் பேசியது போன்றவை கிரிக்கெட் மரபுகளையும், ஒழுக்கத்தையும் மீறியது. இதற்கு சமூக ஊடகங்களில் பெருவாரியாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் தோனி இதுபோன்று அநாகரீகமாக நடந்து கொண்டு மைதானத்தில் சென்று நடுவரிடம் வாக்குவாதம் செய்திருந்தார் அதையே ரிஷப் பந்த் பின்பற்றினார் என்றெல்லாம் நெட்டிஸன்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் ரிஷப்பந்த், செயலுக்கு ஐபிஎல் நிர்வாகம் கடும் தண்டனை விதித்துள்ளது. ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் “ ஐபிஎல் ஒழுங்கு நடத்தை விதி  பிரிவு 2.7 மீறி ரிஷப் பந்த் செயல்பட்டுள்ளார். ஆதலால் அவருக்கு போட்டியின் ஊதியமாக 100 சதவீதத்தையும் அபராதமாக விதிக்கிறோம் இந்த தண்டனையை ரிஷப் பந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதேபோன்று டெல்லி கேபிடல்ஸ் வீரர் ஷர்துல் தாக்கூரும், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒழுக்கவிதிகளை மீறி நடந்துள்ளார். ஆதலால் அவருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 50 சதவீதத்தை அபராதமாக விதிக்கிறோம்.

மைதானத்துக்குள் சென்று நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி கேபிடல்ஸ் துணைப் பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு போட்டி ஊதியத்தில் 100 சதவீதத்தை அபராதமாக விதிக்கிறோம் அதுமட்டுமல்லாமல் ஒரு போட்டியில் பங்கேற்க தடையும் விதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

click me!